பைக் கண்ணாடியை உடைத்த போலீஸ்?… வாக்குச்சாவடியில் வாக்குவாதம் – செஞ்சியில் பதற்றம்!

பைக் கண்ணாடியை உடைத்த போலீஸ்?… வாக்குச்சாவடியில் வாக்குவாதம் – செஞ்சியில் பதற்றம்!

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் உள்ளன. அவற்றில் 10,813 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் நேரடியாகக் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. அதேபோல அங்கு கூடுதலான பாதுகாப்பு படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இருந்தாலும் ஒருசில தொகுதிகளில் பதற்றமான சூழலே நிலவிவருகிறது.

பைக் கண்ணாடியை உடைத்த போலீஸ்?… வாக்குச்சாவடியில் வாக்குவாதம் – செஞ்சியில் பதற்றம்!

செஞ்சி தொகுதியிலுள்ள நல்லான் பிள்ளைபெற்றாள் கிராம வாக்குச்சாவடியில் பிரச்சினை வெடித்துள்ளது. வாக்களிக்க வந்த பொதுமக்களை 200 மீட்டர் தள்ளி வாகனங்களை நிறுத்துமாறு போலீசார் கூறியுள்ளனர். அதற்குப் பொதுமக்கள் மறுக்கவே, போலீசார் ஒருவர் வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்றுகூடி போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரச்சினையால் பதற்றமான சூழல் உருவாகியதால் தற்காலிகமாக அங்கு வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

பைக் கண்ணாடியை உடைத்த போலீஸ்?… வாக்குச்சாவடியில் வாக்குவாதம் – செஞ்சியில் பதற்றம்!

அதேபோல வானூர் தொகுதி கிளியனூர் வாக்குச்சாவடி அருகே அதிமுகவினர் பிரசாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புகாரளித்துள்ளனர். மேலும் வாக்குச்சாவடியிலேயே வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை காவலர்கள், துணை ராணுவ படையினர் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கும் பரபரப்பு நிலவிவருகிறது.