கலை, அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்! மாணவர்கள் அதிர்ச்சி!

 

கலை, அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்! மாணவர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் அதற்கான இணைய தளங்கள் செயல்படவில்லை.

கலை, அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்! மாணவர்கள் அதிர்ச்சி!

தமிழகத்திலுள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.org, www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்தது.இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்கள் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.அனைத்து AFC மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 48 பதிவு கட்டணம் ரூபாய் 2 என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை பதிவு கட்டணம் மட்டுமே 2 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

கலை, அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்! மாணவர்கள் அதிர்ச்சி!

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்,டு நெட்பேங்கிங் மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் the director, directorate of collegiate education Chennai 6 என்ற பெயரில் 26/7/2021 அன்று அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம் எனவும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இணையதள வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்த நிலையில் வருகின்ற 10ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் அதற்கான இணைய தளங்கள் செயல்படவில்லை. www.tngasa.org, www.tngasa.in செயல்படாததால் விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.ஆனால் பல மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களை அணுகி சேர்ந்து வருகின்றனர்.