பொங்கலுக்கு பின்பும் பரிசுத் தொகை பெறலாம் – அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவிப்பு!

 

பொங்கலுக்கு பின்பும் பரிசுத் தொகை பெறலாம் – அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவிப்பு!

தைத் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு சார்பில் ரூ.2,500 பணமும் அரிசி, பருப்பு, முந்திரி உள்ளிட்ட பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் படி, அதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணி கடந்த 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், வரும் 4ம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு பின்பும் பரிசுத் தொகை பெறலாம் – அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவிப்பு!

இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், பொங்கலுக்கு முன் ரூ.2,500 பரிசுத்தொகை பெற முடியாதவர்கள் ஜனவரி 19ஆம் தேதி பெறலாம் என்றும் ஜனவரி 4ஆம் தேதி முதல் காலையில் 100 பேருக்கு, மதியம் 100 பேருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி முடிவு செய்யப்படும் என்றும் அதுவரை பழைய கூட்டணியினர் நண்பர்களாக இருப்பர் என்றும் கூட்டணியில் இறுதிநேரத்தில் தொகுதிகள் வழங்குவதில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கூறினார்.