பிரியங்காவின் ஆடையை பிடித்து இழுத்த விவகாரம் : மன்னிப்பு கேட்ட உ.பி. காவல்துறை!

பிரியங்காவின் ஆடையை பிடித்து இழுத்த விவகாரம் : மன்னிப்பு கேட்ட உ.பி. காவல்துறை!

பிரியங்கா காந்தியின் உடையை பிடித்து இழுத்தற்கு உ.பி. காவல்துறை வருத்தம் தெரிவித்துள்ளது.

பிரியங்காவின் ஆடையை பிடித்து இழுத்த விவகாரம் : மன்னிப்பு கேட்ட உ.பி. காவல்துறை!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இறந்த அப்பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூற எம்.பி. ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் சென்றனர். ஆனால் அவர்களை அனுமதிக்க மறுத்த போலீசார் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போது போலீசார் ஒருவர் பிரியங்கா காந்தியின் ஆடையை பிடித்து இழுத்தார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடும் கண்டனங்களை சந்தித்தது.

பிரியங்காவின் ஆடையை பிடித்து இழுத்த விவகாரம் : மன்னிப்பு கேட்ட உ.பி. காவல்துறை!

இந்நிலையில் இந்நிகழ்வுக்கு உ.பி.யின் நொய்டா காவல்துறை மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து மூத்த பெண் அதிகாரி விசாரணை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெண்களுக்கான முழு மரியாதைக்கு நாங்கள் பொறுப்பு என்றும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் நொய்டா காவல்துறை குறிப்பிட்டுள்ளது .