நான் என்னென்ன செய்கிறேன் என்று திரிணாமுல் காங்கிரசுக்கு கொல்கத்தா போலீஸ் சொல்றாங்க.. பிரியங்கா திப்ரேவால்

நான் என்னென்ன செய்கிறேன் என்று திரிணாமுல் காங்கிரசுக்கு கொல்கத்தா போலீஸ் சொல்றாங்க.. பிரியங்கா திப்ரேவால்

நான் என்னென்ன செய்கிறேன் என்று திரிணாமுல் காங்கிரசுக்கு கொல்கத்தா போலீஸ் தெரிவிப்பதாக தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க.வின் பிரியங்கா திப்ரேவால் புகார் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் பபானிபூர் உள்ளிட்ட 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இம்மாதம் 30ம் தேதி நடைபெற உள்ளது. பபானிபூர் சட்டப்பேரவை தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுவதால் அந்த தொகுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, நந்திகிராம் சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ.க.வின் சுவேந்து ஆதிகாரியிடம் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

நான் என்னென்ன செய்கிறேன் என்று திரிணாமுல் காங்கிரசுக்கு கொல்கத்தா போலீஸ் சொல்றாங்க.. பிரியங்கா திப்ரேவால்
மம்தா பானர்ஜி, பா.ஜ.க.

நந்திகிராமில் மம்தா பானர்ஜியை தோற்கடித்ததுபோல், பபானிபூர் சட்டப்பேரவை தொகுதியிலும் அவரை தோற்கடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. இதற்காக பபானிபூர் தொகுதியில் இளம் வழக்கறிஞரான பிரியங்கா திப்ரேவாலை பா.ஜ.க. களம் இறக்கியுள்ளது. இந்நிலையில், தனது நடவடிக்கைகளை கொல்கத்தா போலீஸ் கண்காணித்து திரிணாமுல் காங்கிரசிடம் சொல்வதாக தேர்தல் ஆணையத்திடம் பிரியங்கா திப்ரேவால் புகார் கொடுத்துள்ளார்.

நான் என்னென்ன செய்கிறேன் என்று திரிணாமுல் காங்கிரசுக்கு கொல்கத்தா போலீஸ் சொல்றாங்க.. பிரியங்கா திப்ரேவால்
தேர்தல் ஆணையம்

பபானிபூர் இடைத்தேர்தலின் பா.ஜ.க. வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் மேற்கு வங்க தேர்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொல்கத்தா காவல்துறையினர் சில சிவில் ஆடை போலீஸ்காரர்களை நியமித்துள்ளனர். அவர்கள் எனது செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து படம் பிடித்து திரிணாமுல் காங்கிரசுக்கு அனுப்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.