ஏழைகளை கொல்வதை நிறுத்தி விட்டு, பணவீக்கம் பிரச்சினைக்கு தீர்வு காண தொடங்குங்கள்.. மோடி அரசை வலியுறுத்திய பிரியங்கா காந்தி

ஏழைகளை கொல்வதை நிறுத்தி விட்டு, பணவீக்கம் பிரச்சினைக்கு தீர்வு காண தொடங்குங்கள்.. மோடி அரசை வலியுறுத்திய பிரியங்கா காந்தி

ஏழைகளை கொல்வதை நிறுத்தி விட்டு, நாடாளுமன்றத்தில் பணவீக்கம் பிரச்சினைக்கு தீர்வு காண தொடங்குங்கள் என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில், ஒவ்வொரு குடிமகனும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும்படி கேட்கிறார்கள். ஏழைகளை கொல்வதை நிறுத்தி விட்டு, நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தொடங்குங்கள் என்று பதிவு செய்து இருந்தார். மேலும், எரிபொருள் விலை உயர்வை மேற்கோள்காட்டி, நாடாளுமன்றத்துக்கு ராகுல் காந்தி சைக்கிளில் வந்த வீடியோவையும் அதில் பிரியங்கா காந்தி பதிவேற்றம் செய்து இருந்தார்.

ஏழைகளை கொல்வதை நிறுத்தி விட்டு, பணவீக்கம் பிரச்சினைக்கு தீர்வு காண தொடங்குங்கள்.. மோடி அரசை வலியுறுத்திய பிரியங்கா காந்தி
பணவீக்கம்

கடந்த வாரமும் விலைவாசி உயர்வு தொடர்பாக மத்திய அரசை டிவிட்டரில் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்து இருந்தார். அந்த டிவிட்டில், நீங்கள் எப்படி மாம்பழம் சாப்பிடுவீர்கள் போன்ற கேள்விகளுக்கு அவர்கள் (ஆளும் பா.ஜ.க.) பழகிவிட்டார்கள். எனவே விலைவாசி உயர்வு போன்ற மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அவர்கள் பயப்படுகிறார்கள் என்று பதிவு செய்து இருந்தார்.

ஏழைகளை கொல்வதை நிறுத்தி விட்டு, பணவீக்கம் பிரச்சினைக்கு தீர்வு காண தொடங்குங்கள்.. மோடி அரசை வலியுறுத்திய பிரியங்கா காந்தி
மல்லிகார்ஜூன் கார்கே

கடந்த மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே பேட்டி ஒன்றில், எரிபொருள் வரி மூலம் மத்திய அரசு ரூ.25 லட்சம் கோடி வசூலிக்கிறது. அதேசமயம் மக்கள் நலனுக்காக நிதி செலவிடப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.