பா.ஜ.க. அரசு தனது பணக்கார நண்பர்களை விவசாய துறையில் களமிறக்க ஆர்வமாக உள்ளது.. பிரியங்கா காந்தி

பா.ஜ.க. அரசு தனது பணக்கார நண்பர்களை விவசாய துறையில் களமிறக்க ஆர்வமாக உள்ளது.. பிரியங்கா காந்தி

பா.ஜ.க. அரசு தனது கோடீஸ்வர நண்பர்களை விவசாய துறையில் களமிறக்க அதிக ஆர்வத்துடன் இருப்பதாக தெரிகிறது என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த விவசாய மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப், தெலங்கானா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தனது கோடீஸ்வர நண்பர்களை விவசாயி துறையில் களம் இறக்க பா.ஜ.க. அரசு ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது என காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

பா.ஜ.க. அரசு தனது பணக்கார நண்பர்களை விவசாய துறையில் களமிறக்க ஆர்வமாக உள்ளது.. பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில், விவசாயிகளுக்கு கடினமான காலங்கள். இந்த நேரத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் கொள்முதல் முறையில் விவசாயிகளுக்கு அரசாங்கம் உதவியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக நடந்தது. பா.ஜ.க. அரசு தனது கோடீஸ்வர நண்பர்களை விவசாய துறையில் களமிறக்க அதிக ஆர்வத்துடன் உள்ளதாக தெரிகிறது. அவர்கள் விவசாயிகளின் பேச்சைக் கூட கேட்க விரும்பவில்லை என பதிவு செய்து இருந்தார்.

பா.ஜ.க. அரசு தனது பணக்கார நண்பர்களை விவசாய துறையில் களமிறக்க ஆர்வமாக உள்ளது.. பிரியங்கா காந்தி
திக்விஜய சிங்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் கூறுகையில், வேளாண் தொடர்பான 3 மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிரானது. புதிய சட்டத்தின்படி, எந்தவொரு பெரிய வர்த்தகரும் மண்டியை திறக்கலாம். இந்த புதிய விவசாயிகளுக்கு எதிரான இந்த மசோதாக்களின்கீழ், மண்டியில் ஏற்படும் எந்தவொரு பிரச்சினையும் அதிகாரிகளால் கையாளப்படும் என தெரிவித்தார்.