வக்கீல் கொலை… உத்தர பிரதேசத்தில் காட்டாட்சி வளர்ந்து வருகிறது.. யோகி அரசை சாடிய பிரியங்கா காந்தி..

வக்கீல் கொலை… உத்தர பிரதேசத்தில் காட்டாட்சி வளர்ந்து வருகிறது.. யோகி அரசை சாடிய பிரியங்கா காந்தி..

உத்தர பிரதேசம் புலந்த்ஷாஹரில் வழக்கறிஞர் தர்மேந்திர சவுத்ரி படுகொலை செய்யப்பட்டதை குறிப்பிட்டு, மாநிலத்தில் காட்டாட்சி அதிகரித்து வருவதாக யோதி ஆதித்யநாத் அரசை பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பிரியங்கா காந்தி டிவிட்டரில், உத்தர பிரதேசத்தில் காட்டாச்சி வளர்ந்து வருகிறது. குற்றங்கள் மற்றும் கொரோனாவும் கட்டுப்பாட்டில் இல்லை.

வக்கீல் கொலை… உத்தர பிரதேசத்தில் காட்டாட்சி வளர்ந்து வருகிறது.. யோகி அரசை சாடிய பிரியங்கா காந்தி..
கடந்த 8 தினங்களுக்கு முன் புலந்த்ஷாஹரில் ஸ்ரீ தர்மேந்திர சவுத்ரி கடத்தப்பட்டார். நேற்று (நேற்று முன்தினம்) அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. கான்பூர், கோரக்பூர் மற்றும் புலந்த்ஷாஹர் என ஒவ்வொரு சம்பவங்களிலும் சட்டம் மற்றும் ஒழுங்கு மந்த நிலை உள்ளது மற்றும் காட்டாட்சி அறிகுறிகள் உள்ளன. அராசங்கம் எவ்வளவு காலம் தூங்குகிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என பதிவு செய்துள்ளார்.

வக்கீல் கொலை… உத்தர பிரதேசத்தில் காட்டாட்சி வளர்ந்து வருகிறது.. யோகி அரசை சாடிய பிரியங்கா காந்தி..

புலந்த்ஷாஹர் நகரை சேர்ந்த வக்கீல் தர்மேந்திர சவுத்ரி. கடந்த மாதம் 25ம் தேதி முதல் தர்மேந்திர சவுத்ரியை காணவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 31) புலந்த்ஷாஹர் நகரில் புதைக்கப்பட்ட நிலையில் சடலாக அவர் கண்டுபிடிக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் உத்தர பிரதேசம் காசியாபாத்தை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி தன்னுடைய உறவு பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த ஒரு கும்பலை தட்டி கேட்டு உள்ளார். இந்நிலையில் கடந்த 20ம் தேதியன்று தனது மகள்களுடன் பைக்கில் சென்று கொண்டு இருந்தபோது ஒரு கும்பல் வழிமுறித்து அவரை அடித்ததுடன் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடி விட்டது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விக்ரம் ஜோஷி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தது குறிப்பிடத்தக்கது.