பா.ஜ.க. அரசின் ஆணவத்தை விவசாயிகள் உடைப்பார்கள்… பிரியங்கா காந்தி நம்பிக்கை

 

பா.ஜ.க. அரசின் ஆணவத்தை விவசாயிகள் உடைப்பார்கள்… பிரியங்கா காந்தி நம்பிக்கை

பா.ஜ.க. அரசின் ஆணவத்தை விவசாயிகள் உடைப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுடன் உரையாடி வருகிறார். அதேபோன்று மதுராவில் நேற்று காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: இன்று பா.ஜ.க. அரசு தனது ஆணவத்தில் விவசாயிகள் மீது அவர்களுக்கு பலன் அளிக்காத சில சட்டங்களை விதிக்கிறது. பா.ஜ.க. அரசின் ஆணவத்தை உடைத்த பிறகே விவசாயிகள் ஓய்வு எடுப்பார்கள் என்ற செய்தியை மதுரா விவசாயிகள் கூட்டம் தெளிவாக அனுப்புகிறது.

பா.ஜ.க. அரசின் ஆணவத்தை விவசாயிகள் உடைப்பார்கள்… பிரியங்கா காந்தி நம்பிக்கை
பிரியங்கா காந்தி

விவசாயிகளின் குரலை கேட்பதும், அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிகள் எடுப்பதும் அரசு மற்றும் பிரதமரின் கடமையாகும். விவசாயிகளுக்கு எதிராக இழிவான சொற்களை பயன்படுத்துவது பாவம். அரசாங்கத்தை அமைப்பவர்களுக்கு அவர்களின் கோரிக்கைகளை கேட்க வேண்டிய கடமை இருக்கிறது. ஒரு தலைவர் திமிர்தனமாக இருந்தால், அவருடைய கொள்கைகள் மக்களின் நலனுக்கும் எதிராக மாறும்.

பா.ஜ.க. அரசின் ஆணவத்தை விவசாயிகள் உடைப்பார்கள்… பிரியங்கா காந்தி நம்பிக்கை
பகவான் கிருஷ்ணர்

பகவான் கிருஷ்ணர், இந்திரனின் (தேவலோக அரசன்) ஈகோவை நீக்கியது போல, பிரதமரின் ஈகோவும் அவரால் (கிருஷ்ணர்) உடைக்கப்படும். மத்திய அரசு தனது ஞானத்தை இழந்து விட்டது. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை கிண்டலாக, கோவர்த்தன் மலையை காப்பாற்றுங்கள் அல்லது அதையும் அரசு விற்று விடும். பிரதமர் மோடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.