மிஷன் உத்தர பிரதேசம்……. பிப்ரவரி முதல் களத்தில் இறங்கும் பிரியங்கா காந்தி… காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்

மிஷன் உத்தர பிரதேசம்……. பிப்ரவரி முதல் களத்தில் இறங்கும் பிரியங்கா காந்தி… காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்

2022ம் ஆண்டில் நடைபெற உள்ள உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில், பிரியங்கா காந்தி மிஷன் உத்தர பிரதேசத்தை திட்டத்தை தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

உத்தர பிரதேசத்தில் தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. 2022ம் ஆண்டில் அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இப்போதே அதற்கான பணிகளை காங்கிரஸ் தொடங்கி விட்டது.

மிஷன் உத்தர பிரதேசம்……. பிப்ரவரி முதல் களத்தில் இறங்கும் பிரியங்கா காந்தி… காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்
பிரியங்கா காந்தி

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி மிஷன் உத்தர பிரதேசம் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும், கட்சியில் மாநில மற்றும் மாவட்டங்கள் அளவில் குழுக்களை அமைத்த பிறகு, வரும் பிப்ரவரி முதல் லக்னோவில் வழக்கமாக வந்து செல்ல முடிவு செய்துள்ளார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மற்றொரு காங்கிரஸ் தலைவர் கூறுகையில், கட்சியை பஞ்சாயத்து அளவில் பலப்படுத்தும் படியும், அதற்காக குழுக்களை அமைக்கும்படியும், கூட்டங்கள் நடத்தும்படியும் தொண்டர்களிடம் பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

மிஷன் உத்தர பிரதேசம்……. பிப்ரவரி முதல் களத்தில் இறங்கும் பிரியங்கா காந்தி… காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்
காங்கிரஸ்

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களிடம் காணொலி வாயிலாக ஒரு சந்திப்பை பிரியங்கா காந்தி நடத்தினார். அப்போது தேர்தல் பணிகளை தொடங்குங்க, எதிர்பாராத நேரத்தில் வந்து பார்வையிடுவேன் என்று அவர்களிடம் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இம்மாத இறுதி முதல் பஞ்சாயத்து மட்டத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு செல்வார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.