முதல்வராக தொடர தார்மீக உரிமை இல்லை.. பதவி விலகுங்க… யோகி ஆதித்யநாத்தை வலியுறுத்திய பிரியங்கா காந்தி

முதல்வராக தொடர தார்மீக உரிமை இல்லை.. பதவி விலகுங்க… யோகி ஆதித்யநாத்தை வலியுறுத்திய பிரியங்கா காந்தி

ஹத்ராஸ் சம்பவத்தை குறிப்பிட்டு, யோகி ஆதித்யநாத் முதல்வராக தொடர தார்மீக உரிமை இல்லை, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

உத்தர பிரதேசம் ஹத்ராஸில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான தலித் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். உறவினர்கள் யாரும் இல்லாமலேயே அவளது இறுதி சடங்கு அவளது சொந்த ஊரில் நேற்று அதிகாலை வேளையில் நடைபெற்றது. இந்த சம்பவத்தை குறிப்பிட்டு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

முதல்வராக தொடர தார்மீக உரிமை இல்லை.. பதவி விலகுங்க… யோகி ஆதித்யநாத்தை வலியுறுத்திய பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

இது தொடர்பாக பிரியங்கா காந்தி டிவிட்டரில், யோகி ஆதிதியநாத் பதவிவிலகுங்க. பாதிக்கப்பட்ட மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாப்பதற்கு பதிலாக, மரணத்தில் கூட ஒவ்வொரு மனித உரிமையையும் பறிக்க உங்கள் அரசாங்கம் உடந்தையாகி விட்டது. முதலமைச்சராக தொடர உங்களுக்கு தார்மீக உரிமை இல்லை என பதிவு செய்து இருந்தார்.

முதல்வராக தொடர தார்மீக உரிமை இல்லை.. பதவி விலகுங்க… யோகி ஆதித்யநாத்தை வலியுறுத்திய பிரியங்கா காந்தி
ஹதராஸ் பெண்ணின் உடல் தகனம்

மேலும், பிரியகாந்தி தொடர்ச்சியான டிவிட்டுகளில், ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையுடன் நான் போனில் பேசிகொண்டு இருந்தபோது, அவரது மகள் காலமானார் என்ற தகவல் அவருக்கு அறிவிக்கப்பட்டது அதை கேட்டதும் அவர் விரக்தியுடன் கூக்குரலிடுவதை நான் கேட்டேன். அவர் (பாதிக்கப்பட்டவரின் தந்தை) தான் விரும்புவதெல்லாம் தனது குழந்தைக்கு நீதி வேண்டும் என்று என்னிடம் சொன்னார். நேற்றிரவு (நேற்று முன்தினம்) மகளின் உடலை கடைசியாக வீட்டுக்கு எடுத்து சென்று, இறுதி சடங்கை செய்வற்கான வாய்ப்பும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது என பதிவு செய்து இருந்தார்.