புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுபவர்களை ஜெயில் அடைக்கிறது உத்தர பிரதேச அரசு…. பிரியங்கா காந்தி கடும் தாக்கு

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுபவர்களை ஜெயில் அடைக்கிறது உத்தர பிரதேச அரசு…. பிரியங்கா காந்தி கடும் தாக்கு

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுபவர்களை ஜெயில் அடைக்கிறது என உத்தர பிரதேச அரசை பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கினார்.

உத்தர பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலத்துக்கு செல்வதற்காக காங்கிரஸ் ஏற்பாடு செய்த ஆயிரம் பஸ்கள் தொடர்பான விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர்ந்தவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள ஆயிரம் பஸ்கள் குறித்த விவரம் என காங்கிரஸ் அளித்த பஸ்கள் பட்டியலில் பெரும்பாலானவை இரு சக்கர வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் என்பதை உத்தர பிரதேச கண்டுபிடித்தது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்தது. மேலும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லாலுவையும் கைது செய்தது. தற்போது இதனை பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுபவர்களை ஜெயில் அடைக்கிறது உத்தர பிரதேச அரசு…. பிரியங்கா காந்தி கடும் தாக்கு

இது தொடர்பாக உத்தரப்பிரதேசத்துக்கான காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாவது: தொற்றுநோய் கொரோனா வைரசுக்கு எதிரான யோகி அரசின் யுத்த முறைகளை பார்த்தீர்களா? புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் பஸ்களை ஏற்பாடு செய்தபோது, காங்கிரஸ் தலைவரை யோகி அரசு தவறான வழக்கில் ஜெயிலில் அடைக்கிறது. கொரோனாவைரஸை எதிர்த்து போராடுவதற்கு நாடே ஒற்றுமையாக நிற்கிறது ஆனால் தொழிலாளர்களுக்காக பஸ், ரயில் டிக்கெட், உணவு மற்றும் ரேஷன் ஏற்பாடு செய்தவர்களை அரசு ஜெயில் அடைக்கிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுபவர்களை ஜெயில் அடைக்கிறது உத்தர பிரதேச அரசு…. பிரியங்கா காந்தி கடும் தாக்கு

ராஜீவ் காந்தியின் 30வது ஆண்டு நினைவு ஆண்டை குறிப்பிட்டு, ராஜீவ்ஜி தனது வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணித்தார். நாடு மற்றும் அதன் மக்களை அவர் விரும்பினார். அவர்களின் வலியை அவரால் பார்க்க முடியவில்லை. பலகீனமானவர்களுக்கு உதவ நாம் அவரிடமிருந்து கற்றுக்கொண்டோம். தொழிலாளர்களுக்காக மாநிலத்தில் உள்ள 50 ஆயிரம் காங்கிரஸ் தொண்டர்கள் குரல் கொடுக்க வேண்டும். அடக்குமுறையை எதிர்ப்பதே ராஜீவ் காந்திக்கான சரியான அஞ்சலியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.