“ராமர் பெயரில் ஊழல்… கோடிக்கணக்கானோர் நம்பிக்கை மீதான தாக்குதல்” – என்ன நடக்கிறது அயோத்தியில்?

 

“ராமர் பெயரில் ஊழல்… கோடிக்கணக்கானோர் நம்பிக்கை மீதான தாக்குதல்” – என்ன நடக்கிறது அயோத்தியில்?

ராமர் கோயிலுக்காக அயோத்தி நிலத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கப்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் நிலத்தின் மதிப்பு தாறுமாறாக எகிறியுள்ளது. அவ்வாறு நிலம் வாங்கியதில் தான் தற்போது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை எதிர்க்கட்சியான சமாஜ்வாதி தலைவர் பவண் பாண்டே கூறியிருக்கிறார். அயோத்தியின் பிஜேஷ்வர் தோப்பில் பாபா ஹரிதாஸ் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை மார்ச் 18ஆம் தேதி உள்ளூரின் சுல்தான் அன்சாரி, ரவி மோகன் திவாரி ஆகிய இருவருக்கும் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.

“ராமர் பெயரில் ஊழல்… கோடிக்கணக்கானோர் நம்பிக்கை மீதான தாக்குதல்” – என்ன நடக்கிறது அயோத்தியில்?

இதனை அறிந்துகொண்ட அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினர் அனில் மிஸ்ரா, அயோத்தி மேயர் ரிஷிகேஷ் உபாத்யாயா ஆகியோர் அதே நிலத்தை சுல்தானிடம் ரூ.18.5 கோடிக்கு வாங்கியுள்ளனர். ஒரே நாளிலேயே ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் ரூ.18 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார். இவ்விவகாரத்தை காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கையில் எடுத்து உபி அரசையும் மத்திய அரசையும் சரமாரியாக விமர்சித்தி வருகின்றனர். இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் அறக்கட்டளைக்கு உத்தரவிட்டுள்ளார்.

“ராமர் பெயரில் ஊழல்… கோடிக்கணக்கானோர் நம்பிக்கை மீதான தாக்குதல்” – என்ன நடக்கிறது அயோத்தியில்?

தற்போது இதனை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்ட நிலம் 5 நிமிடங்களில் அறக்கட்டளை ரூ.18.50 கோடிக்கு வாங்கியிருக்கிறது. இரண்டு பத்திர பதிவுகளிலும் சாட்சிகளாக கையெழுத்திட்டவர்கள் ஒரே நபர்கள்தான். விலை ஏறி விட்டதாக ராமர் கோயில் அறக்கட்டளை கூறுகிறது. இதை யாராவது நம்புகிறீர்களா? அந்தப் பகுதியில் நிலத்தின் விலை அதிகபட்சமாக ரூ.5 கோடிதான் இருக்கும். கடவுள் நம்பிக்கையின் பெயரில் ஊழல் செய்வது கோடிக்கணக்கானோரின் நம்பிக்கை மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்த நில ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.