அப்படி சொல்லாதீங்க அது பாவம்…. மத்திய அரசை தாக்கிய பிரியங்கா காந்தி

 

அப்படி சொல்லாதீங்க அது பாவம்…. மத்திய அரசை தாக்கிய பிரியங்கா காந்தி

விவசாயிகளின் எதிர்ப்பு தொடர்பாக மத்திய அரசு கூறிய கருத்துக்கு பிரியங்கா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும் டெல்லியின் எல்லைகளில் உறைய வைக்கும் குளிரில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

அப்படி சொல்லாதீங்க அது பாவம்…. மத்திய அரசை தாக்கிய பிரியங்கா காந்தி
காங்கிரஸ்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் எதிர்ப்பு ஒரு அரசியல் சதி என்று மத்திய அரசு கூறியதாக தெரிகிறது. மத்திய அரசின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரியங்கா காந்தி கூறியதாவது: விவசாயிகளின் எதிர்ப்பு ஒரு அரசியல் சதி என்று சொல்வது முற்றிலும் தவறானது.

அப்படி சொல்லாதீங்க அது பாவம்…. மத்திய அரசை தாக்கிய பிரியங்கா காந்தி
விவசாயிகள் போராட்டம்

அவர்கள் (மத்திய அரசு) இது போன்ற வார்த்தைகளை விவசாயிகள் குறித்து பயன்படுத்துவது பாவம். விவசாயிகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். அரசாங்கம் அவர்களிடம் கருத்தை கேட்க வேண்டும், சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். விவசாயிகளுடன் மத்திய அரசு இதுவரை 6 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நாளை புதிதாக பேச்சுவார்த்தையை இரு தரப்பினரும் மேற்கொள்ள உள்ளனர். இந்த முறை கட்டாயம் வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.