விளம்பரத்தில் அல்ல.. கொரோனாவில் கவனம் செலுத்துங்க.. யோகி ஆதித்யநாத் அரசுக்கு குட்டு வைத்த பிரியங்கா

விளம்பரத்தில் அல்ல.. கொரோனாவில் கவனம் செலுத்துங்க.. யோகி ஆதித்யநாத் அரசுக்கு குட்டு வைத்த பிரியங்கா

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கொரோனா வைரஸ் தொடர்பாக உத்தர பிரதேச அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தொடர்ச்சியாக செய்துள்ள டிவிட்டுகளில், உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வரும் வேளையில், யோகி ஆதித்யநாத் நிர்வாகம் செய்திகள் மற்றும் விளம்பரத்தை நிர்வகித்தலில் கவனம் செலுத்துகிறது. உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரசுடன் பயங்கரமான பிரச்சினைகளும் வந்து கொண்டிருக்கிறது. அங்கு படுக்கைகள் பற்றாக்குறையாக உள்ளது. மருத்துவமனைகளில் வெளியே நீண்ட வரிசை உள்ளது. இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விளம்பரத்தில் அல்ல.. கொரோனாவில் கவனம் செலுத்துங்க.. யோகி ஆதித்யநாத் அரசுக்கு குட்டு வைத்த பிரியங்கா

கான்பூர், லக்னோ, கோரக்பூர் மற்றும் வாரணாசியிலிருந்து வரும் செய்திகள் நல்லதாக இல்லை. முதல்வருக்கு என்னிடம் சில நேர்மறையான ஆலோசனைகள் உள்ளன. உத்தர பிரதேச அரசு தனது பிடிவாத குணத்தை விட்டு விட்டு, வெளிப்படையான மக்கள் சார்ந்தை கொள்கைகளை மேற்கொள்ள வேண்டும். என பதிவு செய்து இருந்தார். மேலும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எழுதிய கடிதத்தையும் அதில் பதிவேற்றம் செய்துள்ளார்.

விளம்பரத்தில் அல்ல.. கொரோனாவில் கவனம் செலுத்துங்க.. யோகி ஆதித்யநாத் அரசுக்கு குட்டு வைத்த பிரியங்கா

பிரியங்கா காந்தி அந்த கடிதத்தில், நேற்று (நேற்று முன்தினம்) 2,500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக பதிவாகி உள்ளது. தற்போது கிராம புறங்களுடன் பெரிய நகரங்களும் வைரஸ் பிடியில் உள்ளன. பிரசோதனை இல்லை=கொரோனாவும் இல்லை என்ற கொள்கையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதை அது தெளிவுப்படுத்தியுள்ளது. இருப்பினும் நிலவரம் தற்போது முக்கியமானது. இப்போது வரை வெளிப்படையான முறையில் பரிசோதனைகளை அதிகரிக்கவில்லை என்றால், நமது போராட்டம் முழுமை அடையாது, நிலவரம் ஆபத்தானதாக மாறிவிடும் என குறிப்பிட்டு இருந்தார்.