கோடீஸ்வர நண்பர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு,.. விவசாயிகளுக்கு புறக்கணிப்பு… பா.ஜ.க.வை தாக்கிய பிரியங்கா காந்தி

கோடீஸ்வர நண்பர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு,.. விவசாயிகளுக்கு புறக்கணிப்பு… பா.ஜ.க.வை தாக்கிய பிரியங்கா காந்தி

கோடீஸ்வர நண்பர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பும், அரசு விவசாயிகளை புறக்கணிப்பதாக மத்திய பா.ஜ.க. அரசை பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹரியானா அரசின் தடைகளை மீறி டெல்லி சாலோ என்ற பெயரில் பேரணியாக டெல்லி சென்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளை புறக்கணிப்பதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கோடீஸ்வர நண்பர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு,.. விவசாயிகளுக்கு புறக்கணிப்பு… பா.ஜ.க.வை தாக்கிய பிரியங்கா காந்தி
விவசாயிகள் போராட்டம்

பிரியங்கா காந்தி இது தொடர்பாக தொடர்ச்சியான டிவிட்டுகளில், பா.ஜ.க. அரசாங்கத்தில் உள்ள சிஸ்டத்தை பாருங்கள். கோடீஸ்வர நண்பர்கள் டெல்லிக்கு வரும் போது, அவர்களை வரவேற்க சிவப்பு கம்பளம் உருட்டப்படுகிறது. ஆனால் டெல்லிக்கு விவசாயிகள் வரும் சாலைகள் தோண்டப்படுகின்றன. நீங்கள் டெல்லியில் விவசாயிகளுக்கு எதிராக சட்டங்களை உருவாக்கிறீர்கள். ஆனால் விவசாயிகள் தங்களது கவலைகளை எழுப்ப டெல்லிக்கு வந்தால் அது தவறா?

கோடீஸ்வர நண்பர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு,.. விவசாயிகளுக்கு புறக்கணிப்பு… பா.ஜ.க.வை தாக்கிய பிரியங்கா காந்தி
பிரதமர் மோடி

விவசாயிகளின் குரலை ஒடுக்குவதற்காக, அவர்கள் தண்ணீரில் நனைக்கப்படுகிறார்கள், அவர்களை தடுக்க சாலைகள் தோண்டப்படுகின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உரிமை உண்டு எங்கே எழுதப்பட்டுள்ளது என்ற இடத்தை காட்டவும், சொல்லவும் மத்திய அரசு தயாராக இல்லை. ஒரு நாடு ஒரு தேர்தல் குறித்து அக்கறை கொண்ட பிரதமர் (மோடி), ஒரு தேசம் ஒரே நடத்தையை செயல்படுத்த வேண்டும் என்று பதிவு செய்து இருந்தார்.