சைபுதீன் சோஸை கைதி போல் அரசு நடத்துகிறது.. நம் நாடு ஜனநாயக குடியரசு நினைவில் வைச்சுகோங்க.. பிரியங்கா

 

சைபுதீன் சோஸை கைதி போல் அரசு நடத்துகிறது.. நம் நாடு ஜனநாயக குடியரசு நினைவில் வைச்சுகோங்க.. பிரியங்கா

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சைபுதீன் சோஸ். அவரை வீட்டுக்காவலிலிருந்து விடுதலை செய்ய காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி அவரது மனைவி மும்தாசன்னிசா சோஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதில் அளிக்கும்படி ஜம்மு அண்டு காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து புதன்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில், காங்கிரஸ் தலைவர் சைபுதீன் சோஸ் வீட்டுக்காவலில் இல்லை என்றும் அவர் சுதந்திரமாக இருக்கிறார் என்றும் காஷ்மீர் நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்தது.இதனையடுத்து அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

சைபுதீன் சோஸை கைதி போல் அரசு நடத்துகிறது.. நம் நாடு ஜனநாயக குடியரசு நினைவில் வைச்சுகோங்க.. பிரியங்கா

ஆனால், சைபுதீன் சோஸ் இன்னும் வீட்டுக்காவலில்தான் இருப்பதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சைபுதீன் சோஸுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். பிரியங்கா காந்தி டிவிட்டரில், சைபுதீன் சோஸ் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். கைதி போல் அவர் நடத்தப்படுகிறார், பா.ஜ.க. அரசு ஜனநாயகத்தை நசுக்கிறது. ஜம்மு அண்டு காஷ்மீரி்ல் கொடுங்கோன்மை உள்ளது. இந்தியா ஜனநாயக குடியரசு என்பதை அரசு நினைவுப்படுத்த விரும்புகிறேன் என பதிவு செய்து இருந்தார். மேலும் சைபுதீன் சோஸ் தனது வீட்டின் உள்ளே முள்வேலியிடப்பட்ட காம்புவண்ட் சுவரின் அருகில் நிற்கும் படத்தையும் அவர் பதிவேற்றம் செய்து இருந்தார்.

சைபுதீன் சோஸை கைதி போல் அரசு நடத்துகிறது.. நம் நாடு ஜனநாயக குடியரசு நினைவில் வைச்சுகோங்க.. பிரியங்கா

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப சிதம்பரம் நேற்று டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இந்தியாவில் மனித உரிமைகள் வெட்கமின்றி மறுக்கப்படுவதை உலகம் கவனித்து வருகிறது. சுதந்திரமான மற்றும் ஜனநாயக நாடு என்ற இந்தியாவின் பெருமை ஒவ்வொரு நாளும் குறைந்து வருகிறது. காஷ்மீரில் அரசியல் தலைவர்களை வீட்டு காவலில் வைத்திருப்பது மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் அதிகார துஷ்பிரயோகமாகும். அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டாக எழ வேண்டும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மற்றும் இதர தலைவர்களை விடுவிக்க கோர வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.