விவசாயிகளை சந்தித்து அவர்களின் கண்ணீரை துடைக்க பிரதமர் மோடிக்கு நேரமில்லை.. பிரியங்கா காந்தி தாக்கு

 

விவசாயிகளை சந்தித்து அவர்களின் கண்ணீரை துடைக்க பிரதமர் மோடிக்கு நேரமில்லை.. பிரியங்கா காந்தி தாக்கு

உலகின் பல நாடுகளுக்கு விஜயம் செய்த பிரதமர் மோடிக்கு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து அவர்களின் கண்ணீரை துடைக்க நேரமில்லை என்று பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தார்

உத்தர பிரதேசம் முசாபர்நகரில் காங்கிரஸ் கட்சி விவசாயிகள் சந்திப்பு ஏற்பாடு செய்து இருந்தது. அதில் கலந்து கொண்ட அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்றுவிவசாயிகள் உலகின் பல நாடுகளுக்கு பிரதமர் மோடி விஜயம் செய்தார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து அவர்களின் கண்ணீரை அவர் துடைக்கவில்லை. டெல்லிக்கு அருகே சுமார் 90 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த காலகட்டத்தில் குறைந்தபட்சம் 215 விவசாயிகள் இறந்துள்ளனர். அவர்களுக்கு மின்சாரம் மற்றும் நீர் வழங்குவது துண்டிக்கப்பட்டது, அவர்கள் தாக்கப்பட்டனர். அவர்கள் அமைதியாக போராடி வருகின்றனர், ஆனால் டெல்லியின் எல்லைகள் சர்வதேச எல்லைகளாக மாற்றப்பட்டன.

விவசாயிகளை சந்தித்து அவர்களின் கண்ணீரை துடைக்க பிரதமர் மோடிக்கு நேரமில்லை.. பிரியங்கா காந்தி தாக்கு
பிரியங்கா காந்தி

பிரதமர் மோடி விவசாயிகளை தொழில்முறை போராட்டக்காரர்கள் என்று கேலி செய்தார். விவசாயி சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் அழும்போது இது வேடிக்கையானது என்று கருதுகிறார். மனிதர்களை போலவே ஒரு நாட்டுக்கும் இதயம் உள்ளது. அந்த இதயம் துடிக்கும்போது நாடு வாழ்கிறது. நிலத்துடன் தொடர்புடையவர்கள், நிலத்தில் அறுவடை மற்றும் விதைப்பு செய்யும் விவசாயிகள் நம் நாட்டின் இதயம் என்று நான் நம்புகிறேன். அவர்கள் வழங்குபவர்கள் (உணவு தானியம்).

விவசாயிகளை சந்தித்து அவர்களின் கண்ணீரை துடைக்க பிரதமர் மோடிக்கு நேரமில்லை.. பிரியங்கா காந்தி தாக்கு
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

2018ல் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.60ஆக இருந்தது. இன்று அது ரூ.80-90 என்ற அளவில் உள்ளது. மின்சார கட்டணம் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து வருகிறது. ஆனால் நீங்கள் (விவசாயிகள்) கரும்புக்கு நியாயமான விலையை பெறவில்லை. சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் மற்றும் ரத்து செய்ய வேண்டும். அரசியலுக்காக என் முகத்தை காட்ட வரவில்லை. நான் தொடர்ந்து வருவேன். நாங்கள் உங்களுடன் போராடுவோம். பின் வாங்க வேண்டாம். இந்த அரசாங்கம் பலவீனமாக உள்ளது. இந்த அரசாங்கம் பின்வாங்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.