கொரோனா வைரஸ் இப்போது கிராமங்களை நோக்கி நகர்கிறது.. பிரியங்கா காந்தி எச்சரிக்கை

 

கொரோனா வைரஸ் இப்போது கிராமங்களை நோக்கி நகர்கிறது.. பிரியங்கா காந்தி எச்சரிக்கை

கொரோனா வைரஸ் இப்போது கிராமங்களை நோக்கி நகர்கிறது என பிரியங்கா காந்தி எச்சரிக்கை செய்துள்ளார்.

நம் நாட்டில் தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்து வருவதால், தடுப்பூசி பணியை தீவிரப்படுத்தும் நோக்கில், வெளிநாட்டிலிருந்து (ரஷ்யா) கொரோனா வைரஸ் தடுப்பூசியை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் இப்போது கிராமங்களை நோக்கி நகர்கிறது.. பிரியங்கா காந்தி எச்சரிக்கை
கோவிட்-19 தடுப்பூசி

இந்நிலையில், போதிய தடுப்பூசியை கையிருப்பு வைக்காமல் ஏற்றுமதி செய்து விட்டு, தற்போது வெளிநாட்டிலிருந்து தடுப்பூசி இறக்குமதி செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார். பிரியங்கா காந்தி இது தொடர்பாக கூறியிருப்பதாவது: இந்தியாவை கொரோனா அழிப்பதை பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது.

கொரோனா வைரஸ் இப்போது கிராமங்களை நோக்கி நகர்கிறது.. பிரியங்கா காந்தி எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பரிசோதனை

70 ஆண்டு கால அரசின் முயற்சிகளை தோற்கடிக்கும் வகையில் தடுப்பூசி ஏற்றுமதியாளராக இருந்த நாம், வலுக்கட்டாயமாக இறக்குமதியளாராக மாறியிருக்கிறோம். விமானத்தில் பயணிக்கும் பயணிகளில் யார் ஒருவர் தனது புகைப்படத்தை போர்டிங் பாஸில் ஒட்டியிருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே ஆபத்தான நேரத்தில் விமானத்திலிருந்து தப்பிக்க உயிர் காக்கும் பட்டனை அழுத்த முடியும் என்பதை போல் மோடி செயல்படுகிறார். உத்தர பிரதேசததில் கடந்த 10 தினங்களுக்குள் கொரோனா பாதிப்பு 7 மடங்கு அதிகரித்துள்ளது. இப்போது கொரோனா வைரஸ் கிராமங்களை நோக்கி நகர்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.