பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு.. பா.ஜ.க. அரசின் மிஷன் சக்தி தோல்வி.. பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு.. பா.ஜ.க. அரசின் மிஷன் சக்தி தோல்வி.. பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க பா.ஜ.க. அரசு கொண்டு வந்த மிஷன் சக்தி திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதையும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்பவர்கள் கடுமையான எச்சரிக்கையுடன் இரும்பு கரத்துடன் கையாளப்படுவதில் கவனம் செலுத்தும் வகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மிஷன் சக்தி என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு.. பா.ஜ.க. அரசின் மிஷன் சக்தி தோல்வி.. பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
மிஷன் சக்தி

மிஷன் சக்தி திட்டத்தின்கீழ், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாலியல் புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டது. தற்போது மிஷன் சக்தி திட்டம் தோல்வி அடைந்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு.. பா.ஜ.க. அரசின் மிஷன் சக்தி தோல்வி.. பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிரியங்கா காந்தி டிவிட்டரில், அரசாங்கத்தின் நோக்கம் பாசாங்குத்தனம் மற்றும் தவறான பிரச்சாரம் ஆகும்போது, பயணங்கள் தோல்வியடையும். உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை மூடி மறைக்க பா.ஜ.க. அரசாங்கம் அறிமுகம் செய்த மிஷன் சக்தி தோல்வி அடைந்தது. ஒரு பெண்ணை எரித்தற்கு காரணமானவர்கள் மீது ஒரு மாதம் கழித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்று பதிவு செய்து இருந்தார்.