நேரு கொண்டு வந்த சட்டத்தை பா.ஜ.க. அரசு நீக்கியது.. புதிய சட்டம் கோடீஸ்வரர்களுக்கு உதவும்.. பிரியங்கா காந்தி

நேரு கொண்டு வந்த சட்டத்தை பா.ஜ.க. அரசு நீக்கியது.. புதிய சட்டம் கோடீஸ்வரர்களுக்கு உதவும்.. பிரியங்கா காந்தி

பதுக்கலுக்கு எதிராக நேரு கொண்டு வந்த சட்டத்தை பா.ஜ.க. அரசாங்கம் ரத்து செய்தது. தற்போது அவர்கள் கொண்டு வந்துள்ள சட்டம் கோடீஸ்வரர்களுக்கு உதவும் என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.

உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இதற்காக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அங்கு தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று உ.பி.யில் சஹரன்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி விவசாயி மகாபஞ்சாயத்து கூட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தது. அதில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

நேரு கொண்டு வந்த சட்டத்தை பா.ஜ.க. அரசு நீக்கியது.. புதிய சட்டம் கோடீஸ்வரர்களுக்கு உதவும்.. பிரியங்கா காந்தி
ஜவஹர்லால் நேரு

1955ல் ஜவஹர்லால் நேரு பதுக்கலுக்கு எதிராக சட்டங்களை உருவாக்கினார். ஆனால் இந்த சட்டத்தை பா.ஜ.க. அரசாங்கம் ரத்து செய்தது. இந்த புதிய சட்டம் கோடீஸ்வரர்களுக்கு உதவும். விவசாயிகளின் உற்பத்தி செய்யும் விளைபொருட்களின் விலை அவர்கள் (கோடீஸ்வரர்கள்) நிர்ணயம் செய்வார்கள். இந்த 3 வேளாண் சட்டங்களும் மிகவும் மோசமானவை.

நேரு கொண்டு வந்த சட்டத்தை பா.ஜ.க. அரசு நீக்கியது.. புதிய சட்டம் கோடீஸ்வரர்களுக்கு உதவும்.. பிரியங்கா காந்தி
பா.ஜ.க.

நாங்கள் ஆட்சிக்கு வர வாக்களித்தால் காங்கிரஸ் இந்த சட்டங்களை நீக்கும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர பா.ஜ.க. தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அவமதிக்கின்றனர். இந்த சட்டங்களை நீக்கும் வரை எனது கட்சி தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.