ஹத்ராஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு.. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.. பிரியங்கா காந்தி

ஹத்ராஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு.. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.. பிரியங்கா காந்தி

ஹத்ராஸ் தலித் பெண் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த மாதம் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, மருத்துவமனையின் சிகிச்சை பலன் இன்றி இறந்து போன 19 வயது தலித் பெண் விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

ஹத்ராஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு.. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.. பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

ஹத்ராஸ் வழக்கு விசாரணையை உத்தர பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் உச்ச நீதிமன்றம் நேற்று பரபரப்பான உத்தரவு பிறப்பித்தது. ஹத்ராஸ் வழக்கின் சி.பி.ஐ. விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்காணிக்க உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பு உள்பட ஹத்ராஸ் வழக்கின் அனைத்து அம்சங்களும் அலகாபாத உயர் நீதிமன்றத்தால் கவனிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஹத்ராஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு.. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.. பிரியங்கா காந்தி
உச்ச நீதிமன்றம்

ஹத்ராஸ் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரியங்கா காந்தி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக பிரியங்கா காந்தி டிவிட்டரில், ஹத்ராஸ் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நீதிக்கான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. முதல் நாளிலிருந்து நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. ஹத்ராஸ் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உத்தர பிரதேச அரசால் கடுமையாக நடத்தப்பட்டனர். அவளது (பாதிக்கப்பட்ட பெண்) நடத்தை படுகொலை செய்யப்பட்டது. தீமைகள் மற்றும் பாரபட்சத்துடன் முடிவுகள் எடுக்கப்பட்டன என பதிவு செய்து இருந்தார்.