அரசு பங்களாவை காலி செய்ய தயாராகி விட்ட பிரியங்கா காந்தி.. தற்காலிகமாக குருகிராம் வீட்டில் குடியேறுகிறார்

அரசு பங்களாவை காலி செய்ய தயாராகி விட்ட பிரியங்கா காந்தி.. தற்காலிகமாக குருகிராம் வீட்டில் குடியேறுகிறார்

சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கபட்டதை கருத்தில் கொண்டு, 1997ம் ஆண்டு டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள பங்களாவை பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு ஒதுக்கியது. அது முதல் பிரியங்கா காந்தி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், சோனியா காந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. அதற்கு பதில் இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பை வழங்கியது.

அரசு பங்களாவை காலி செய்ய தயாராகி விட்ட பிரியங்கா காந்தி.. தற்காலிகமாக குருகிராம் வீட்டில் குடியேறுகிறார்

இந்நிலையில், டெல்லி லோதி எஸ்டேட்டில் 35 எண்ணுள்ள பங்களாவில் வசித்து வரும் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அங்கியிருந்து வெளியேறும்படி பிரியங்கா காந்திக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் இம்மாத தொடக்கத்தில் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அதற்கு பிறகும் வீட்டை காலி செய்யவில்லை என்றால், விதிமுறைப்படி சேதாரம் அல்லது அபராத வாடகை வசூலிக்கப்படும் என அந்த நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டு இருந்தது.

அரசு பங்களாவை காலி செய்ய தயாராகி விட்ட பிரியங்கா காந்தி.. தற்காலிகமாக குருகிராம் வீட்டில் குடியேறுகிறார்
அதனையடுத்து, பிரியங்கா காந்தி புதிய வீட்டை தேடும் படலத்தை தொடங்கினார். தற்போது டெல்லியில் சுஜன் சிங் பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டை தேர்வு செய்துள்ளதாகவும், அந்த வீட்டில் தற்போது பழுது பார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல். ரிப்பேர் பணிகள் முடிய குறைந்தபட்ச 2 மாதங்கள் வரை ஆகலாம் என்பதால் அதுவரை பிரியங்கா காந்தி தற்காலிகமாக ஹரியானா குருகிராமில் டி.எல்.எப். அர்லியா செக்டார் 42ல் உள்ள வீட்டில் தங்க உள்ளதாக தகவல். மேலும் லோதி எஸ்டேட் வீட்டில் உள்ள பொருட்களில் பெரும்பாலானவை குருகிராம் வீட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது, அந்த வீட்டில் பாதுகாப்பு ஆய்வுகளும் முடிந்து விட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆக, ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் பிரியங்கா காந்தி அரசு பங்களாவை காலி செய்வது உறுதியாகி விட்டது.