உத்தர பிரதேசத்தில் யூரியா பற்றாக்குறை.. விவசாயிகள் கவலை.. யோகி அரசு தலையிட பிரியங்கா காந்தி கோரிக்கை

உத்தர பிரதேசத்தில் யூரியா பற்றாக்குறை.. விவசாயிகள் கவலை.. யோகி அரசு தலையிட பிரியங்கா காந்தி கோரிக்கை

உத்தர பிரதேசத்தில் யூரியாவுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல். இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட வேண்டும் என காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரியங்கா காந்தி டிவிட்டரில்: உத்தர பிரதேசத்தில் பல பகுதிகளில் யூரியா பற்றாக்குறையாக உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் யூரியா பற்றாக்குறை.. விவசாயிகள் கவலை.. யோகி அரசு தலையிட பிரியங்கா காந்தி கோரிக்கை

அங்கு (உத்தர பிரதேசம்) பெரும்பாலான கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரங்கள் தீர்ந்து விட்டதால் நீண்ட வரிசைகளில் விவசாயிகள் நிற்கின்றனர். கள்ள சந்தையால் விவசாயிகள் கலங்குகின்றனர். உத்தர பிரதேச அரசு உடனடியாக தலையிட்டு, யூரியா பற்றாக்குறை பிரச்சினையை தீர்க்க வேண்டும். என பதிவு செய்து இருந்தார். மேலும் அதனுடன், யூரியா பற்றாக்குறையால் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தெரிவிக்கும் வீடியோ ஒன்றையும் அதில் பதிவேற்றம் செய்து இருந்தார்.

உத்தர பிரதேசத்தில் யூரியா பற்றாக்குறை.. விவசாயிகள் கவலை.. யோகி அரசு தலையிட பிரியங்கா காந்தி கோரிக்கை

அந்த வீடியோவில், கடுமையான யூரியா பற்றாக்குறையால் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான நாட்களை கூட்டுறவு சங்கங்களின் முன்பு நீண்ட வரிசையில் நிற்பதில் செலவிடுவதாக அதில் விவசாயிகள் தெரிவித்தனர். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் இழந்த செல்வாக்கையும், அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரியங்கா காந்தி அங்கு செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.