விவசாயிகளே வேண்டாம்ன்னு சொல்றாங்க.. நீங்க ஏன் திரும்ப பெற மறுக்கிறீர்கள்?.. பிரியங்கா காந்தி

 

விவசாயிகளே வேண்டாம்ன்னு சொல்றாங்க.. நீங்க ஏன் திரும்ப பெற மறுக்கிறீர்கள்?..  பிரியங்கா காந்தி

புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகளே வேண்டாம் என்று சொல்லும்போது நீங்கள் ஏன் திரும்ப பெற மறுக்கிறீர்கள்? என்று பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் விவசாயிகள் கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: டெல்லியின் எல்லைகளில் 80 நாட்களுக்கு மேலாக குளிரில் அமர்ந்திருக்கும் விவசாயிகள் தற்போது கோடைகாலத்துக்காக தங்களை தயார் செய்து கொள்கிறார்கள். அவர்கள் எதற்காக அமர்ந்திருக்கிறார்கள்? சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காக என்று பிரதமர் கூறுகிறார்.

விவசாயிகளே வேண்டாம்ன்னு சொல்றாங்க.. நீங்க ஏன் திரும்ப பெற மறுக்கிறீர்கள்?..  பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி


விவசாயிகளே அது தங்களுக்கு தேவையில்லை என்று சொல்லும்போது, நீங்கள் ( பிரதமர் மோடி) ஏன் அவற்றை திரும்ப பெறவில்லை? அவர்கள் (பா.ஜ.க. அரசு) 2017ம் ஆண்டு முதல் கரும்பு விலையை உயர்த்தினார்களா? உத்தர பிரதேசத்தில் மட்டும் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிலுவை தொகை வழங்கப்படவில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதேவேளையில், நாடு முழுவதுமாக கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ15 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அவர் ஒரு பிரதமராக இருக்கிறார், அவர் உங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்கவில்லை.

விவசாயிகளே வேண்டாம்ன்னு சொல்றாங்க.. நீங்க ஏன் திரும்ப பெற மறுக்கிறீர்கள்?..  பிரியங்கா காந்தி
விவசாயிகள் போராட்டம் (கோப்பு படம்)


சுற்றுப்பயணங்கள் மற்றும் பேரணிகளுக்காக உலகம் முழுவதும் நீங்கள் ( பிரதமர் மோடி) பயணம் செய்தீர்கள். பயணத்துக்காக பெரிய விமானங்களை வாங்கினீர்கள். ஆனால் உங்கள் இல்லத்திலிருந்து 2-3 கிலோ மீட்டர் தொலைவில் முகாமிட்டுள்ள விவசாயிகளை நீங்கள் கேள்விப்பட்டதே இல்லை. நாடாளுமன்றத்தில் அவர்களை அந்தோலன் ஜீவி (தொழில்முறை போராட்டக்காரர்கள்) என்று அழைத்து கேலி செய்தீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.