மக்களுக்காக பணியாற்றுங்க…. அரசாங்கத்தை கவிழ்க்கிற வேலை பார்க்காதீங்க… பா.ஜ.க.வை தாக்கிய பிரியங்கா காந்தி..

காங்கிரஸ் கட்சி ஆன்லைனில் ‘ஸ்பீக் அப் இந்தியா’ என்ற பிரச்சாரத்தை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அந்த கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் நெருக்கடியின் தன்மை மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரியது மற்றும் அதை கட்டுப்படுத்த அரசாங்கம் போராடுகிறது.

பா.ஜ.க.

ஆனால், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு பதிலாக அரசாங்கத்தை ஸ்திரமின்மைக்குள்ளாக்கவும், கவிழ்க்கவும் முயற்சிக்கிறீர்கள். ஒருவருக்கொருவர் உதவ வேண்டிய நேரம் மற்றும் மக்களுக்காக வேலை செய்யுங்கள். ஏனென்றால் அவர்கள் மீது நமக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. பேருந்துகளைப் பயன்படுத்தும்போது உங்க சொந்த பேனர்கள் மற்றும் ஸ்டிக்கர்களையும் வைக்குமாறு நாங்கள் பரிந்துரைத்த போதிலும் எங்களது ஆயிரம் பேருந்துக்களை மறுத்து விட்டீர்கள். அதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் உறுதியளித்த 12 ஆயிரம் பேருந்துகள் காகிதங்களில் மட்டுமே இருந்தன. அவை ஒரு போதும் சாலைக்கு வரவில்லை. இவ்வாறு அவர் பா.ஜ.க. தலைவர்களையும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலத்துக்கு செல்வதற்காக காங்கிரஸ் ஏற்பாடு செய்த ஆயிரம் பஸ்கள் தொடர்பான விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புலம்பெயர்ந்தவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள ஆயிரம் பஸ்கள் குறித்த விவரம் என காங்கிரஸ் அளித்த பஸ்கள் பட்டியலில் பெரும்பாலானவை இரு சக்கர வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் என்பதை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கண்டுபிடித்தது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்தது. மேலும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் லாலுவையும் ஜெயிலில் அடைத்தது.

Most Popular

ஆட்டம் கண்ட பங்கு வர்த்தகம்… ஆனாலும் முதலீட்டாளர்கள் ஹேப்பி…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் காலையில் நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால் பின்னர் வர்த்தகம் சரிவு காண தொடங்கியது. முதலீட்டாளர்கள் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டதால் வர்த்தகம் மந்த கதியில் இருந்தது. இருப்பினும்...

சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக ராமர் கோவில் திகழும்! – குடியரசுத் தலைவர் ட்வீட்

இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக ராமர் கோவில் திகழும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த விழாவுக்கு...

“அடையாளம் தெரியாத பிணத்தால் வந்த குழப்பம்” -இறந்த மனைவி உயிரோடு வந்தார் -அவரை கொலை செய்ததாக சிறைக்கு சென்ற கணவனும் வெளியே வந்தார் .

உத்திரபிரதேச மாநிலம் அலிகார் காவல்நிலையத்திற்கு ஒரு பெண் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தார் .அங்கு வந்த அவர் அங்குள்ள பெண் கான்ஸ்டபிளை சந்தித்து ,தன் பெயர் வர்ஷா என்றும் தான் இறந்து விட்டதாக...

சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸுக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்...