எந்தவொரு அரசு வங்கியையும் தற்போதைக்கு தனியார்மயமாக்க வாய்ப்பில்லை….

 

எந்தவொரு அரசு வங்கியையும் தற்போதைக்கு தனியார்மயமாக்க வாய்ப்பில்லை….

பொதுத்துறை அல்லது அரசு வங்கிகளை விரைவில் தனியார்மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட சில பொதுத்துறை வங்கிகளை முதலில் தனியார்மயமாக்க அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க போவதாக மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

எந்தவொரு அரசு வங்கியையும் தற்போதைக்கு தனியார்மயமாக்க வாய்ப்பில்லை….

கடந்த சில ஆண்டுகளாக பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருகிறது. 2017ம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27ஆக இருந்தது. தற்போது 12ஆக குறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் அரசு வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேளை இந்த செய்தி உண்மையாக இருந்தாலும் கூட இந்த நிதியாண்டில் எந்தவொரு அரசு வங்கிகளும் தனியார்மயமாக்கப்பட வாய்ப்பில்லை என சில தகவல் அறிந்த வட்டாரங்கள் உறுதியாக கூறுகின்றன.

எந்தவொரு அரசு வங்கியையும் தற்போதைக்கு தனியார்மயமாக்க வாய்ப்பில்லை….

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்துள்ளது மற்றும் குறைந்த மதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் இந்த நிதியாண்டில் அரசு வங்கிகள் தனியார்மயமாக்க வாய்ப்பில்லை. தற்போது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் உடனடி திருத்த நடவடிக்கை கட்டமைப்பின்கீழ் உள்ளன. கடன் கொடுப்பது, இயக்குனர்கள் கட்டணம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அந்த வங்கிகள் மீது இந்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. இதனால் எந்தவொரு அரசு வங்கியையும் இந்த நிதியாண்டில தனியார்மயமாக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.