”வீடியோ கான்பரன்சிங்கில் மீட்டிங் நடத்த தனி டிவி” – வியு நிறுவனம் அறிமுகம் !

 

”வீடியோ கான்பரன்சிங்கில் மீட்டிங் நடத்த தனி டிவி” – வியு நிறுவனம் அறிமுகம் !

வீடியோ கான்பரன்சிங் முறையில் அலுவலகம் தொடர்பான மீட்டிங் நடத்தவும், பங்குபெறவும், வசதி கொண்ட பிரத்யேக ”மீட்டிங் பை வியு” என்ற டிவியை வியு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஏற்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக பலரும் வீடுகளில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக அலுவல் தொடர்பான மீட்டிங் அனைத்தும் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஜூம் உள்ளிட்ட செயலி மூலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தேவையை கருத்தில் ”மீட்டிங் பை வியு” என்ற பிரத்யேக டிவியை வியு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

”வீடியோ கான்பரன்சிங்கில் மீட்டிங் நடத்த தனி டிவி” – வியு நிறுவனம் அறிமுகம் !

வீடியோ கான்பரன்சிங் செய்வதற்கு ஏற்ற வகையில் இதில் அதிநவீன கேமரா மற்றும் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த டிவியின் முன்னே 6 முதல் 8 அடி தூரத்தில் அமர்ந்தாலும்,இதில் உள்ள கேமரா அமர்ந்திருப்பவரை தெளிவாக படம்பிடிக்குமாம். மேலும் தெளிவான காணொளியை வெளிப்படுத்தும் திரையை கொண்டுள்ளது என தெரியவந்துள்ளது.

இதுமட்டுமின்றி, ஜூம், ஸ்கைப், கூகுள் என பெரும்பாலான செயலிகளை இதில் பயன்படுத்தலாம் என்றும் இதன் விலை 1.5 லட்சத்தில் இருந்து தொடங்குவதாக வியு நிறுவனத்தின் தலைவர் தேவிதா சஃரப் தெரிவித்தார்.

”வீடியோ கான்பரன்சிங்கில் மீட்டிங் நடத்த தனி டிவி” – வியு நிறுவனம் அறிமுகம் !

பிளே ஸ்டஷன் 5 ரெடி டிவிக்களை பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வரும் நிலையில், அதே பாணியில் பொருட்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை குழப்ப விரும்பவில்லை என குறிப்பிட்ட அவர், கேமிங் பிரியர்களை கவரும் வகையில் தனியாக மானிட்டர்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

  • எஸ். முத்துக்குமார்