பஸ்ல பாண்டி பஜார் போறதுக்குள்ள, ரயில்ல பெங்களூரே போயிடலாமாம் -இனி ரயில் மணிக்கு 160 km வேகத்துல போகுமாம்.

பஸ்ல பாண்டி பஜார் போறதுக்குள்ள, ரயில்ல பெங்களூரே போயிடலாமாம் -இனி ரயில் மணிக்கு 160 km வேகத்துல போகுமாம்.

ரயில்வே துறையில் தனியார் நுழைவதால் இனி ரயிலின் வேகம் அதிவேகமாக கூடப்போகிறதாம் .23 தனியார் நிறுவனங்கள் ரயில்வே துறையில் ஈடுபட மனு அளித்திருப்பதாக தகவல் வந்துள்ளது .இந்நிலையில் ரயில்வே துறை இனி அதி நவீனமயமாக்கப்படுமாம் .

பஸ்ல பாண்டி பஜார் போறதுக்குள்ள, ரயில்ல பெங்களூரே போயிடலாமாம் -இனி ரயில் மணிக்கு 160 km வேகத்துல போகுமாம்.
அந்நியன் படத்துல வர மாதிரி அழுக்கு படிந்த டாய்லெட் .சுத்தமில்லாத உணவுகள் ,எப்பவுமே ட்ரெயின் லேட்டாவே வருவது ,இது எதுவுமே இனி இருக்காதாம். ரயிலுக்குள் பிச்சைக்காரர்கள் தொல்லை , வெள்ளரி பிஞ்சி ,கொய்யாப்பழம் விற்கும் கூட்டமெல்லம் இனி வர மாட்டார்களாம் .அதி நவீன சொகுசான முறையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்படுமாம் .ரயில் பெட்டியின் உள்ளே கேமெரா பொருத்தப்பட்டு ,ட்ரைவருடன் எந்நேரமும் தொடர்புகொள்ள வசதி ,ஸ்லைடிங் டோர்,பல மொழிகளில் ரயில் பற்றிய தகவல் ,இணைய தொடர்பு வசதி போன்ற அதி நவீன வசதியோடு வரப்போகுதாம் .
அது மட்டும் இல்ல ,இனி ரயிலு முதல்ல மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்துல போகுமாம் ,2024 முதல் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்துல போகுமாம் ,அதுக்கப்புறம் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்துல போகுமாம் .அது மட்டுமில்லைங்க ,ரயில லேட்டா ஓட்டி வர ட்ரைவருக்கு உடனே அபராதம் விதிப்பங்களாம் .
அப்புறம் ரயில் வரும்போது எந்த கட்சியாவது போராட்டம் பண்றேன்னு ரயில உடைத்தாலோ ,இல்லேன்னா தண்டவாளத்துல தலை வச்சி படுத்து ரயில் போக்குவரத்தை தடை பண்னால் அவுங்க கிட்டேயே பெனால்டி வசூலிப்பாங்களாம் .

பஸ்ல பாண்டி பஜார் போறதுக்குள்ள, ரயில்ல பெங்களூரே போயிடலாமாம் -இனி ரயில் மணிக்கு 160 km வேகத்துல போகுமாம்.