சென்னை சென்ட்ரல், தாம்பரத்தில் இருந்து தனியார் ரயில்கள்- தென்னக ரயில்வே அறிவிப்பு

சென்னை சென்ட்ரல், தாம்பரத்தில் இருந்து தனியார் ரயில்கள்- தென்னக ரயில்வே அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து தனியார் ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
ரயில் சேவைகள் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்க ரயில் சேவைகளை தனியாருக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், தாம்பரத்தில் இருந்து தனியார் ரயில்கள்- தென்னக ரயில்வே அறிவிப்பு

இதற்கான திட்ட வரையறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தென்னக ரயில்வேயில், தனியார் ரயில்களை இயக்குவதற்கான மையமாக சென்னை செண்ட்ரல் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரல், தாம்பரத்தில் இருந்து தனியார் ரயில்கள்- தென்னக ரயில்வே அறிவிப்பு

இது தொடர்பாக தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் கூறுகையில், தண்டையார்பேட்டை பணிமனையில் தனியாருக்கு இடம் அளிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். எதிர் எதிர் மார்க்கங்களில் 12 தனியார் ரயில்களை இயக்க அனுமதி அளிக்க உள்ளதாகவும் ஜான் தாமஸ் தெரிவித்தார்.