தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் இல்லை…புதிதாக கிளம்பும் சர்ச்சை!

கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 15 ஆம் தேதி நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பலர் கோரிக்கை விடுத்தனர். அதனால் அந்த பொதுத்தேர்வும், 11 ஆம் வகுப்புக்கான மீதமுள்ள தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் ஆல்பாஸ் ஆக அறிவிக்கப்பட்டனர். தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு விடைத்தாள்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்குமாறு அனைத்துப் பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் விடைத்தாள்கள் இல்லை என்று தெரிய வந்துள்ளது. அதாவது பெரும்பாலான தனியார் பள்ளிகள் மதிப்பெண்களை குறித்து வைத்துக் கொண்டு விடைத்தாள்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்து விட்டதாகவும் அதனை பெற்றோர் பாதுகாத்து வைக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்த தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர், மாணவர்களின் விடைத்தாள்கள் வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டால் தவறு நடக்க வாய்ப்பு இருப்பதால், பதிவேடுகளில் இருக்கும் மதிப்பெண்களை வைத்து பொதுத்தேர்வு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Most Popular

என்னதான் ஆச்சு… தொடர் நஷ்டத்தில் டாடா மோட்டார்ஸ்..

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.8,443.98 கோடியை...

ராமர் கோயில் பூமி பூஜை! இன்னும் எத்தனை பேரை மருத்துவமனைக்கு அனுப்ப விரும்புகிறீர்கள் மோடிஜி- திக்விஜய சிங்

அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நாளை நடைபெற உள்ளது. அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த...

கொரோன சிகிச்சைக்கு எய்ம்ஸ் செல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு அமித் ஷா சென்றது ஏன்?… சசி தரூர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உறுதியானது. இதனையடுத்து 55 வயதான அமித் ஷா குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையான மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக...

பீகார் சட்டப்பேரவையில் ஒரு கேள்வி கூட கேட்காமல் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்…

பொதுவாக பீகார் சட்டப்பேரவையின் மழைகாலக் கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக கூட்டத்தொடர் 1 நாளாக குறைக்கப்பட்டது. மேலும் பீகார் சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடர்...