தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை!

 

தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை!

கொரோனா பரவலால் கடந்த ஆண்டு மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை முழுமையாக திறக்கப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒரு சில வாரங்களிலேயே மாணவர்கள், ஆசிரியர்கள் பலருக்கு கொரோனா உறுதியானதால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தி வருகிறார்கள்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை!

இதனிடையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதால், ஆசிரியர்கள் 12ம் வகுப்பு மாணவர்கள் மீது கவனம் செலுத்தி வகுப்புகளை நடத்தி வருகிறார்கள். இத்தகைய சூழலில், கொரோனா பரவலின் காரணமாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பினார். வீட்டிலிருந்த படியே 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் எடுக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மே 1 முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவித்துள்ளார்.