ஆபத்தான நிலையில் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் தனியார் மருத்துவமனைகள்!

ஆபத்தான நிலையில் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் தனியார் மருத்துவமனைகள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று ஒரேநாளில் 30,608பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆபத்தான நிலையில் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் தனியார் மருத்துவமனைகள்!

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14லட்சத்து 99ஆயிரத்து 45ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 297 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,768ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,98,945ஆக உயர்ந்துள்ளது.

ஆபத்தான நிலையில் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் தனியார் மருத்துவமனைகள்!

இந்நிலையில் சென்னை கிண்டி, கிங்ஸ் ஆய்வகத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், “தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக சளி, இருமல், காய்ச்சல் இருக்கும் நபர்களை தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்து கொள்கின்றனர்.ஆனால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் போது, ஆக்சிஜன் வசதியில்லை என்று கூறி நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு ஆபத்தான கட்டத்தில் அனுப்பி வைக்கின்றனர். ஒவ்வொரு மருத்துவமனையும், அடிப்படை மருத்துவ கட்டமைப்பை ஏற்படுத்தி கொள்வது அவசியம். இது உயிர்களோடு விளையாடும் விஷயம் . எல்லா தனியார் மருத்துவமனைகளையும் குறை சொல்லவில்லை. ஆனால் சில மருத்துவமனைகள் இப்படி தான் செய்கின்றன” என்றார்.