கொரோனா நோயாளிகளை வெளியேற்றும் தனியார் மருத்துவமனைகள்… அதிர்ச்சி சம்பவம்!

 

கொரோனா நோயாளிகளை வெளியேற்றும் தனியார் மருத்துவமனைகள்… அதிர்ச்சி சம்பவம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 33 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், ஆக்சிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளை வெளியேற்றும் தனியார் மருத்துவமனைகள்… அதிர்ச்சி சம்பவம்!

கொரோனாவால் பாதிக்கப்படும் மூன்றில் ஒருவருக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல தனியார் மருத்துவமனைகள் புதிய நோயாளிகள் அனுமதிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் கிடைக்காததால் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோயாளிகளை வெளியேற்றும் தனியார் மருத்துவமனைகள்… அதிர்ச்சி சம்பவம்!

அம்மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் ஈரோடு மற்றும் சேலம் பகுதியில் இருந்து ஆக்சிஜனை பெற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக போதிய ஆக்சிஜன் சப்ளை இல்லாததால், மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆக்சிஜனுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைகள் வெளியேற்றுகின்றனர். இன்று மாலை வரை மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதால் நோயாளிகள் வெளியேற்றப்படுவதாக தனியார் மருத்துவமனைகள் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.