மத்திய பிரதேசத்தில் பணம் செலுத்தாததால் முதியவரை கட்டி போட்ட தனியார் மருத்துவமனையை சீல் வைத்த அதிகாரிகள்

மத்திய பிரதேசத்தில் பணம் செலுத்தாததால் முதியவரை கட்டி போட்ட தனியார் மருத்துவமனையை சீல் வைத்த அதிகாரிகள்

மத்திய பிரதேசம் ஷாஜாபூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன் 80 வயதான முதியவர் லட்சுமி நாரயணனை சிகிச்சைக்காக உறவினர்கள் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் முதியவரை சேர்க்கும்போது டெபாசிட்டாக ரூ.5 ஆயிரத்தை உறவினர்கள் செலுத்தியுள்ளனர். இதனையடுத்து முதியவருக்கு மருத்துவமனையில் அவருக்கு சில நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு சிகிச்சைக்கான கட்டணமாக ரூ.11,270ஐ செலுத்துமாறு நோயாளியின் உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

மத்திய பிரதேசத்தில் பணம் செலுத்தாததால் முதியவரை கட்டி போட்ட தனியார் மருத்துவமனையை சீல் வைத்த அதிகாரிகள்

ஆனால், அவர்களிடம் பணம் இல்லாததால் சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் படுக்கையில் அந்த முதியவரின் கை மற்றும் கால்களை கயிற்றால் கட்டி எங்கும் தப்பி செல்லாதபடி படுக்க வைத்து இருந்தனர். இந்த விவகாரம் வெளியே தெரிந்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இந்த விஷயத்தை கவனத்தில் காண்டு ஷாஜாப்பூர் மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் மாவட்ட மருத்துவமனையும் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

மத்திய பிரதேசத்தில் பணம் செலுத்தாததால் முதியவரை கட்டி போட்ட தனியார் மருத்துவமனையை சீல் வைத்த அதிகாரிகள்

இந்நிலையில் நேற்று அந்த தனியார் மருத்துவமனைக்கான மருத்துவமனை பதிவு ரத்து செய்யப்பட்டதுடன், அந்த மருத்துவமனையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் வயதான குடிமகனுக்கு மனிதாபிமானமற்ற சிகிச்சை அளித்தற்காக அந்த மருத்துவமனையின் மேலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று நோயாளிகள் மாவட்ட மருத்துமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.