அட்மிட் ஆனதும் இறந்த நோயாளி -ஆறு லட்சம் கறந்த ஆஸ்பத்திரி -கொரானாவால் கொள்ளையடிக்கும் மருத்துவமனைகள்

 

அட்மிட் ஆனதும் இறந்த நோயாளி -ஆறு லட்சம் கறந்த ஆஸ்பத்திரி -கொரானாவால் கொள்ளையடிக்கும் மருத்துவமனைகள்

கொரானாவால் இறந்த நோயாளிக்கு லட்சக்கணக்கில் வசூலித்த ஒரு தனியார் ஹாஸ்ப்பிட்டல் மீது நடவடிக்கை எடுக்க உள்ளனர் .

அட்மிட் ஆனதும் இறந்த நோயாளி -ஆறு லட்சம் கறந்த ஆஸ்பத்திரி -கொரானாவால் கொள்ளையடிக்கும் மருத்துவமனைகள்

உ.பி.யின் மதுராவில் உள்ள ஒரு தனியார் கோவிட் –19 மருத்துவமனையில் 42 வயதான ஹெம்லதா அகர்வால் வியாழக்கிழமை கொரானா வைரஸ் தொற்று ஏற்ப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்தார் 

அப்போது அந்த தனியார் மருத்துவமனை அவர் உடனடியாக ஆறு லட்ச ரூபாய் கொடுத்தால்தான் சிகிச்சைக்கு அனுமதிப்போம் என்று கறாராக கூறியது .உடனே அவரின் உறவினர் ஆறு லட்ச ரூபாயை அந்த ரிசெப்ஷன் கேஷ் கௌண்ட்டரில் கட்டினார் .அதன் பிறகு அவரை அங்கு சிகிச்சைக்கு அனுமதித்த கொஞ்ச நேரத்திலேயே அவர் இறந்து விட்டார் .அதனால் அதிர்ச்சியடைந்த அவரின் உறவினர்கள் இது பற்றி கேட்டபோது பணம் திருப்பி தர முடியாது என்று அந்த ஹாஸ்ப்பிட்டல் நிர்வாகம் கூறியது .ஆனால் அப்போது அந்த நோயாளியின் உறவினர் அந்த ஹாஸ்ப்பிட்டல் ஊழியர் பணம் கேட்ட ஆடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுவிட்டார் .

அதுபற்றி பேசிய அவர், ஒரு கோவிட் –19 நோயாளிக்கு சிகிச்சையளிக்க அரசாங்கம் அறிவுறுத்திய விகிதங்களை விட 20 மடங்கு அதிக கட்டணம்இந்த தனியார் ஹாஸ்ப்பிட்டல்  வசூலித்துள்ளார்கள்  என்றார் .

பிறகு அந்த ஆடியோவை கேட்டு பதட்டமடைந்த ஹாஸ்ப்பிட்டல் நிர்வாகம் அவரிடம் 3.75 லட்ச ருபாய்  பெற்றுக்கொண்டு மீதி பணத்தை கொடுத்துவிட்டனர் .அவரது குடும்பத்தினர் ஒரு  நாள் சிகிச்சைக்காக ரூ .3.75 லட்சம் செலுத்திய போதிலும் அவர் இறந்துவிட்டார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரிய பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது .அதனால் சுகாதார அதிகாரிகள் அந்த ஹாஸ்ப்பிட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.