மாத தவணை கட்ட வற்புறுத்தப்படும் சுய உதவிக் குழுக்கள்! – திணறும் பெண்கள்

மாத தவணை கட்ட வற்புறுத்தப்படும் சுய உதவிக் குழுக்கள்! – திணறும் பெண்கள்
ஆறு மாதங்களுக்கு வங்கி இ.எம்.ஐ கடன் தவணை வசூலிக்க சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், தவணையைக் கட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் வற்புறுத்தப்படுவதால் செய்வதறியாது பெண்கள் திணறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெண்கள் மேம்பாட்டுக்காக தி.மு.க ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பித்தன. இந்த குழுக்கள் மூலம் பொருட்கள் உற்பத்தி செய்து விற்று லாபம் சம்பாதிப்பது என்று திட்டமிடப்பட்டது. இதற்கு தேவையான நிதி உதவியை அரசு, வங்கிகள் கடனாக வழங்கி வருகின்றன. பல மகளிர் சுய உதவி குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. சில மட்டும், எதற்காக மகளிர் சுய உதவிகள் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை மறந்து செயல்பட்டு வருகின்றன. வட்டிக்கு பணம் வாங்கும் சிறு வங்கிகள் போல மாறிவிட்டது.
இந்த குழுக்களுக்கு வங்கிகள் மற்றும் தனியார் சிறு நிறுவனங்கள் கடன் வழங்கி வருகின்றன. அப்படி வாங்கிய பணத்தை முறையாக மாதா மாதம் செலுத்தி வந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக பல மகளிர் சுய உதவிக் குழுக்கள் சிதைந்துவிட்டன. ஆனாலும் ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி, மாதத் தவணையை கேட்டு வங்கிகள், சிறு நிறுவனங்கள் பெண்களை தொந்தரவு செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கிருஷ்ணகிரியில் ஐ.வி.டி.பி. என்ற பெயரில் தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கிராமங்களில் மகளிர் குழு அமைத்து குறைந்த வட்டிக்கு கடன் வழங்கி மாத தவணை முறையில் வசூலித்து வருகிறது. இதற்கென குழுக்களின் தலைவிகள் செயல்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று நோய் காரணமாக மூன்று மாதத்திற்கு எவ்வித கடன் தொகையும் வசூலிக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த ஐ.வி.டி.பி. அமைப்பு கடன் தொகையைக் கட்ட வேண்டும் என்று கட்டாயபடுத்துகிறது. மேலும் சேமிப்புகளை வசூலித்துவிட்ட நிலையில் தற்போது கடனை செலுத்தாவிட்டால் வங்கியின் வட்டியை அவரவர்களே செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் வருகின்ற 10ம் தேதிக்குள் கடன் தொகையைக் கட்ட வேண்டும் என் நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனயாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...