`கடனை கட்டு; இல்லன்னா செத்துப் போ!’- ரூ.28,000 லோன் வாங்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு நடந்த துயரம்

 

`கடனை கட்டு; இல்லன்னா செத்துப் போ!’- ரூ.28,000 லோன் வாங்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு நடந்த துயரம்

28 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய ஆட்டோ டிரைவர், தனியார நிதி நிறுவன அதிகாரியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி, பிள்ளையார் கோயில் தெருவில் மகேந்திரன், தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவரான இவர், புள்ளம்பாடியில் உள்ள எல்&டி என்ற தனியார் நிதி நிறுவனத்தில் சுய உதவிக்குழு மூலம் 28,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இரண்டு முறை தவணை செலுத்திய மகேந்திரனால், தவணை கட்ட முடியவில்லை. கொரோனா ஊரடங்கு அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டு விட்டது.

வருமானமின்றி தவித்து மகேந்திரனிடம், கடனை கட்டச் சொல்லி நிதிநிறுவன அதிகாரி விக்னேஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை அன்று நிதி நிறுவன அதிகாரி விக்னேஷ் மது அருந்துவிட்டு மகேந்திரனுக்கு போன் செய்துள்ளார். அப்போது, “உன்னால தாண்டா பணம் கட்டுறவங்களும் கட்டமாட்டேங்குறாங்க. கடனை கொடுக்க முடியாத நீ, கயிற வாங்கி தூக்கு போட்டு சாகலாம்ல” என்று திட்டியுள்ளார். இதனை பொருக்கமுடியாத மகேந்திரன், நீ எங்கடா இருக்க என்று கேட்டு விக்னேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, விக்னேஷ் சரமாரியாக தாக்கியுள்ளார். பலத்த காயம் அடந்த அவர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

`கடனை கட்டு; இல்லன்னா செத்துப் போ!’- ரூ.28,000 லோன் வாங்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு நடந்த துயரம்

இதேபோல், கடந்த வாரம் திருச்சி மாவட்டம், குருவம்பட்டியைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம் என்பவர் திருச்சி தில்லைநகரிலுள்ள சோழமண்டலம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் விவசாயத் தேவைக்காகத் தனது டிராக்டர் ஆவணங்களை அடமானமாக வைத்து, கடன் வாங்கியிருந்தார். அவரை டார்ச்சர் செய்த ஃபைனான்ஸ் நிறுவனத்தினர், ‘நீ வாங்கின லோனை முடிக்கணும்னா, நீ செத்துட்டேனு உன்னோட டெத் சர்டிஃபிக்கேட்டை கொடு. லோனை க்ளோஸ் பண்ணிக்கிடலாம்’ என்று அவரோட செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினாங்க. இந்த சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அத்துமீறும் தனியார் நிதி நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். இல்லையேல் தொடரும்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.