வங்கியில் ரூ. 22 லட்சம் பணம் எடுத்த தனியார் நிறுவன மேலாளர் : பிணமாக மீட்கப்பட்ட பயங்கரம்!

 

வங்கியில் ரூ. 22 லட்சம் பணம் எடுத்த தனியார் நிறுவன மேலாளர் : பிணமாக மீட்கப்பட்ட பயங்கரம்!

தேனி மாவட்டம் பென்னிகுவிக் நகரில் வசித்து வருபவர் 34 வயதான அருண்குமார். இவர் மகேந்திரா இரு சக்கர வாகனத்தில் விற்பனைப் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை விற்பனை நிலைய உரிமையாளர் சன்னாசி வங்கியிலிருந்து பணம் எடுத்து வரச் சொல்லி அருண்குமாரை அனுப்பியுள்ளார். இதையடுத்து வங்கிக்கு சென்ற அருண்குமார் ரூபாய் 22 லட்சத்தை எடுத்துள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் விற்பனை நிலையம் வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த விற்பனை நிலைய உரிமையாளர் சன்னாசி இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அருண்குமாரின் செல்போன் சிக்னலை வைத்து விசாரணையை தொடங்கினர்.

வங்கியில் ரூ. 22 லட்சம் பணம் எடுத்த தனியார் நிறுவன மேலாளர் : பிணமாக மீட்கப்பட்ட பயங்கரம்!

தேனி பைபாஸ் சாலையில் அருண்குமாரின் மொபைல் சிக்னல் துண்டிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் ஆய்வு செய்ததில் அருண் குமாரின் இருசக்கர வாகனமும். அவர் தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது அருகே ரத்தக்கரை படிந்த சுத்தியல் மற்றும் மது பாட்டில் கிடந்தது.

இதை தொடர்ந்து அருண் குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருண்குமாரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் யாரேனும் இவ்வாறு செய்தார்களா அல்லது அவருக்கு தெரிந்தவர்களே அவரை பின் தொடர்ந்து இதுபோன்ற வழிப்பறியில் ஈடுபட்டு அவரை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் தேனி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கியில் ரூ. 22 லட்சம் பணம் எடுத்த தனியார் நிறுவன மேலாளர் : பிணமாக மீட்கப்பட்ட பயங்கரம்!

முன்னதாக இதே இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பணி செய்து வந்த கலைவாணன் என்பவர் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.