“ஈ அடிக்கும் இன்ஜினியரிங் காலேஜ்கள்” -ஏரிகளை கல்லூரியாக்கி கொள்ளையடித்தவர்கள் -மீண்டும் ஏரிகளாக மாற்றினால் தண்ணீராவது கிடைக்கும் .

“ஈ அடிக்கும் இன்ஜினியரிங் காலேஜ்கள்” -ஏரிகளை கல்லூரியாக்கி கொள்ளையடித்தவர்கள் -மீண்டும் ஏரிகளாக மாற்றினால் தண்ணீராவது கிடைக்கும் .

சென்ற வருடமே பல இன்ஜினீயரிங் கல்லூரிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக கிடந்தன .பல கல்லூரிகளுக்கு சென்ற ஆண்டு மூடுவிழா நடத்தப்பட்டது .இந்த நிலையில் இந்த ஆண்டு கொரானா பாதிப்பால் பல இன்ஜினியரிங் கல்லூரிகளில் அட்மிஷன் கேட்டு ஒருவர் கூட போன் பண்ணவில்லையாம் ,இதனால் ஏரிகளையும், மாட்டு தொழுவங்களையும் கல்லூரியாக மாற்றி கட்டண கொள்ளையடித்தவர்கள் எல்லாம் இனி அந்த கல்லூரிகளை என்ன செய்வது என்று யோசிக்கிறார்களாம் ,ஒருவேளை திருமண மணடபமாக மாற்றலாம் என்றால் அதற்கும் யாரும் வருவதில்லை .சரி சினிமா தியேட்டர்களாக மாற்றலாம் என்றால் அதையும் திறக்க முடியவில்லை .அதனால் மீண்டும் மாட்டு தொழுவங்களாக மாற்றிவிடலாமா என்று பலர் யோசிக்கிறார்களாம்

“ஈ அடிக்கும் இன்ஜினியரிங் காலேஜ்கள்” -ஏரிகளை கல்லூரியாக்கி கொள்ளையடித்தவர்கள் -மீண்டும் ஏரிகளாக மாற்றினால் தண்ணீராவது கிடைக்கும் .
தமிழ்நாட்டில் இருக்கும் உயர் கல்லூரிகளின் நிலையும் இதேதான் .ஏனென்றால் பல பெரிய கல்லூரிகளுக்கு மாணவர்கள் வெளி மாநிலங்களிருந்து படிக்க வருகிறார்கள் .அதற்கென சில மீடியேட்டர்களை அந்த கல்லூரி நிர்வாகம் பல இடங்களில் அமர்த்தியுள்ளது .ஆனால் இப்போதிருக்கும் இந்த கொரானா சூழ்நிலையில் வெளி மாநில மாணவர்களும் மாநிலம் விட்டு மாநிலம் வந்து படிக்க விரும்பவில்லை .
தமிழகத்தில் இந்த நிலையென்றால் பக்கத்திலிருக்கும் கர்நாடகத்திலும் இதே நிலைதான் நிலவுகிறது .அங்கு
கர்நாடக மருத்துவம் பொறியியல் மற்றும் பல் மருத்துவ அமைப்பு கோமெட் -கே என்ற பெயரில் இயங்குகிறது .இதன் மூலம் இந்த ஆண்டு 50சதவீத இடங்களை கூட நிரப்பமுடியுமா என சந்தேகமாக இருக்கிறது என்று ஓர் கல்லூரியின் முதல்வர் கூறினார் .

“ஈ அடிக்கும் இன்ஜினியரிங் காலேஜ்கள்” -ஏரிகளை கல்லூரியாக்கி கொள்ளையடித்தவர்கள் -மீண்டும் ஏரிகளாக மாற்றினால் தண்ணீராவது கிடைக்கும் .