பேருந்துகள் இயங்காது…தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திடீர் அறிவிப்பு!

பேருந்துகள் இயங்காது…தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திடீர் அறிவிப்பு!

100% பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளித்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பேருந்துகள் இயங்காது…தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திடீர் அறிவிப்பு!

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு வருகின்ற 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகளில் பயணிக்க இபாஸ் நடைமுறை அமலில் இருந்த நிலையில் இனி இபாஸ் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது . அதேசமயம் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க 50% பயணிகள் மட்டுமே பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில் 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி தந்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

பேருந்துகள் இயங்காது…தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திடீர் அறிவிப்பு!

அதேபோல் பேருந்துகளில் குளிர்சாதன வசதி பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 3,500 பேருந்துகள் இன்னும் இயக்கப்படாமல் உள்ளன. அதேபோல் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து இதுவரை தொடங்கப்படாத நிலையில் ஆம்னி பேருந்துகள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை.