கோவில் திருவிழா மோதலில், தனியார் பேருந்து நடத்துனர் படுகொலை!

 

கோவில் திருவிழா மோதலில், தனியார் பேருந்து நடத்துனர் படுகொலை!

ராணிப்பேட்டை

ராணிபேட்டை அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் தனியார் பேருந்து நடத்துனர் படுகொலை செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சர்வந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் (30). இவர் தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் சர்வந்தாங்கலில் உள்ள நெல்லியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி, அன்றிரவு சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, நாகேந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கிரிவாசன் (20) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

கோவில் திருவிழா மோதலில், தனியார் பேருந்து நடத்துனர் படுகொலை!

இதில் ஆத்திரமடைந்த கிரிவாசன் மற்றும் அவரது நண்பர்கள் பீர் பாட்டிலால் நாகேந்திரனின் கழுத்துப் பகுதியில் குத்திவிட்டு தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு ராணிபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் நாகேந்திரன் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.தகவலின் பேரில் ஆற்காடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இதுகுறித்து புகாரின் பேரில் ஆற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் கிரிவாசன், ராமநாதபுரத்தை சேர்ந்த அவரது நண்பர்கள் ஹேமபிரசாத், கேசவன் உள்ளிட்டோரை பிடித்து விசாரித்து வருகின்றனர். கோவில் திருவிழாவில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.