`இரவில் ஓடஓட விரட்டிக் கொல்லப்பட்ட தனியார் வங்கி மேலாளர்!’- திருச்சியில் இரவில் நடந்த பழிக்கு பழி

`இரவில் ஓடஓட விரட்டிக் கொல்லப்பட்ட தனியார் வங்கி மேலாளர்!’- திருச்சியில் இரவில் நடந்த பழிக்கு பழி

திருச்சியில் முன்விரோதத்தில் தனியார் வங்கி ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`இரவில் ஓடஓட விரட்டிக் கொல்லப்பட்ட தனியார் வங்கி மேலாளர்!’- திருச்சியில் இரவில் நடந்த பழிக்கு பழி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பாளையநல்லூர் பகுதியைச் சேர்ந்த வண்ணமணி என்பவருக்கு கோவேந்திரன், புகழேந்தி என இரண்டு மகன்கள், ஒரு மகள். இதில் புகழேந்தி திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரின் வீட்டின் அருகில் வசித்த ரங்கராஜ், திருச்சியில் ரயில்வே போலீஸாக பணியாற்றினார். இருவருக்குமிடையே இடத் தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த வருடம் இதே நாளில் இரு வீட்டாருக்கும் நடந்த தகராறில் ரங்கராஜை கோவேந்திரன் கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் கோவேந்திரன், அவரது தந்தை வண்ணமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வந்துள்ளனர்.

`இரவில் ஓடஓட விரட்டிக் கொல்லப்பட்ட தனியார் வங்கி மேலாளர்!’- திருச்சியில் இரவில் நடந்த பழிக்கு பழி

இதையடுத்து, குடியிருந்த வீட்டை காலி செய்த வண்ணமணி குடும்பத்தினர் மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூருக்கு கிராமத்திற்கு குடிபெயர்ந்து செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்றிரவு பொருட்கள் அனைத்தையும் வேனில் ஏற்றிக்கொண்டு மண்ணச்சநல்லூர் போலீசார் பாதுகாப்புடன் சென்றனர். புகழேந்தி, தன் நண்பர் சதீசுடன் பைக்கில் பாச்சூரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்த புகழேந்தியும், சதீசும் தப்பியோடினர். அவர்களை விரட்டிச் சென்ற கும்பல், புகழேந்தியை சரமாரியாக வெட்டிக் கொன்றது. சதீசுக்கு தலையில் வெட்டு விழுந்தது. அவர் பலத்த காயம் அடைந்தார். தகவலறிந்த மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சதீசை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

`இரவில் ஓடஓட விரட்டிக் கொல்லப்பட்ட தனியார் வங்கி மேலாளர்!’- திருச்சியில் இரவில் நடந்த பழிக்கு பழி

கொலை நடந்த இடத்துக்கு வந்த திருச்சி எஸ்பி (பொறுப்பு) சீனிவாசன், விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஜீயபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் கோகிலா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.