’5 முறை கொரோனா டெஸ்ட்…. 6 நாள் தனிமை’ இதற்காகத்தானா? பிரீத்தி ஜிந்தா வேதனை

 

’5 முறை கொரோனா டெஸ்ட்…. 6 நாள் தனிமை’ இதற்காகத்தானா? பிரீத்தி ஜிந்தா வேதனை

நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதிக்கொண்டன.

முதலில் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஸ்ரேயாஸ் ஐயரும், மார்கஸ் ஸ்டொயின்ஸ் மட்டுமே நன்றாக ஆடினார்கள். பஞ்சாப் அணியின் பவுலர் கிறிஸ் ஜோர்டன் ஒரே ஓவரி 30 ரன்களை வாரி வழங்கியதால், டெல்லி அணி 157 எனும் நல்ல ஸ்கோரை அடைந்தது.

’5 முறை கொரோனா டெஸ்ட்…. 6 நாள் தனிமை’ இதற்காகத்தானா? பிரீத்தி ஜிந்தா வேதனை

அடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் டீமி, கே.எல்.ராகுல் மற்றும் மயங் அகர்வால் ஓப்பனிங் இறங்கினார்கள். மிக நிதானமாக இந்த ஜோடி ஆட்டத்தைத் தொடங்கியது. 21 ரன்கள் எடுத்த நிலையில் 4.3 ஓவரில் கே.எல்.ராகுல் அவுட்டானார்.  அடுத்து வந்த கருன் நாயர் 1, நிக்கோலஸ் பூரான் 0, மேக்ஸ்வெல் 1, கான் 12 என வரிசையாக சொற்ப ரன்களில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது. பஞ்சாப் இனி வெல்லவே முடியாது என்ற நிலையில் இருந்ததை மயங் மாற்றினார்.

’5 முறை கொரோனா டெஸ்ட்…. 6 நாள் தனிமை’ இதற்காகத்தானா? பிரீத்தி ஜிந்தா வேதனை

ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கிய மயங் அகர்வால் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். அடுத்து ஆட வேண்டிய பந்துகளை மட்டும் ஆடினார். மற்ற பந்துகளில் நிதானம் காட்டி விக்கெட்டைக் காத்துக்கொண்டார்.

19-வது ஓவரில் டெல்லி அணியின் ரபாடா பந்துவீசினார். அதன் மூன்றாம் பந்தை மயங் அடித்து ஆடினார். அதில் இரண்டு ரன்களை ஓடினர். ஆனால், நடுவர்கள் முதல் ரன்னில் கோட்டை ரீச் செய்ய வில்லை என்று ஒரு ரன் மட்டுமே கொடுத்தனர். ஆனால், டிவியில் ரீப்ளே செய்யும்போது வீரர் கோட்டில் வைப்பது நன்கு தெரிந்தது. நடுவரின் இந்தத் தவறான தீர்ப்பால் சூப்பர் ஓவர் எனும் நிலைக்குச் சென்று பஞ்சாப் தோற்றது.

’5 முறை கொரோனா டெஸ்ட்…. 6 நாள் தனிமை’ இதற்காகத்தானா? பிரீத்தி ஜிந்தா வேதனை

நடுவரின் தவறான தீர்ப்பைக் கண்டித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

’கொரோனா பாதிப்புகளுடையே நான் ஐக்கிய அமீரகத்திற்கு வந்துள்ளேன். 5 முறை கொரோனா டெஸ்ட் எடுத்தும், 6 நாள்கள் தனிமைப்படுத்தியும் கொண்டு வந்தது இதைப் பார்க்கத்தானா? நடுவரின் முடிவு அதிர்ச்சி அளித்தது. இவ்வளவு தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை என்றால் அதனால் என்னதான் பயன்? பிசிசிஐ இதுபோன்ற நேரங்களில் புதிய விதிகளை உருவாக்க வேண்டியது அவசியம்’ என்பதாகப் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கும் நடுவரின் முடிவு குறித்த தன் அதிருப்தியை வெளிப்படுத்தி ட்விட்டரி பதிவிட்டுள்ளார்.