“ஒர்க் ஃப்ரம் ஜெயில்” -போன் வச்சிக்கிட்டு ஜெயிலுக்குலேர்ந்தே எப்படி சம்பாதிக்கறாங்க பாருங்க

 

“ஒர்க் ஃப்ரம் ஜெயில்” -போன் வச்சிக்கிட்டு ஜெயிலுக்குலேர்ந்தே எப்படி சம்பாதிக்கறாங்க பாருங்க

ஒர்க் பிரம் ஹோம் மாதிரி சில கைதிகள் சிறையிலிருந்து கொண்டே போன் வைத்து கொண்டு பல தொழிலதிபர்களை மிரட்டி பணம் சம்பாதிக்கும் விஷயம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது

“ஒர்க் ஃப்ரம் ஜெயில்” -போன் வச்சிக்கிட்டு ஜெயிலுக்குலேர்ந்தே எப்படி சம்பாதிக்கறாங்க பாருங்க

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காலாப்பட்டு சிறையிலிருக்கும் ஜெகன் என்ற கைதி ஒரு கொலை வழக்கில் சிறையிலிருக்கிறார்.அவர் சிறையிலிருந்து படியே பல தொழிலதிபர்களை போனில் மிரட்டி பணம் சம்பாதிக்கும் விஷயம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது .ஜெகன் சமீபத்தில் கடலூரில் உள்ள ஒரு இரும்புக்கடை அதிபர் தன்சேகர் என்பவருக்கு போன் செய்து தன்னுடைய கூட்டாளி மதனிடம் 50000 ரூபாய் பணத்தை உடனே கொடுக்கவேண்டுமென்றும் அப்படி தவறினால் தன்னுடைய ஆட்களை விட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார் .
இதனால் பயந்து போன தனசேகர் அவரை தேடி வந்த ஜெகனின் ஆட்களிடம் அவர் கேட்ட 50000 ரூபாயை கொடுத்துள்ளார் .ஆனால் அந்த பணத்தை வாங்கிய ஜெகனின் கூட்டாளி அந்த பணத்தை ஜெகனின் மனைவியிடம் கொடுக்கவில்லை .இதனால் கோபமுற்ற ஜெகன் மீண்டும் தொழிலதிபருக்கு போன் செய்து இன்னும் பணம் வரவில்லை என்று மிரட்டி தன்னுடைய அடியாட்களை அவரின் கடைக்கு அனுப்பி மிரட்டியுள்ளார் .இதனால் பயந்து போன தனசேகர் அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகனின் கூட்டாளிகளை சிலரை கைது செய்து சிறையிலடைத்தரர்கள்

“ஒர்க் ஃப்ரம் ஜெயில்” -போன் வச்சிக்கிட்டு ஜெயிலுக்குலேர்ந்தே எப்படி சம்பாதிக்கறாங்க பாருங்க