Home தமிழகம் "சசிகலா விடுதலையில் சிறை நிர்வாகம் சதித்திட்டம் தீட்டுகிறது"!

“சசிகலா விடுதலையில் சிறை நிர்வாகம் சதித்திட்டம் தீட்டுகிறது”!

சசிகலா விடுதலையாவதில் சதித்திட்டம் நடப்பதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சசிகலா

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா 4 ஆண்டு சிறைத்தண்டனைக்கு பிறகு வரும் ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாக இருந்தார். இந்த சூழலில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட அவர் பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து சசிகலாவுக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . தற்போது சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளதாகவும், அவர் சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனை நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் சசிகலா விடுதலை செய்யப்படுவதை தடுக்க சிலர் சதித்திட்டம் தீட்டுவதாக பலரும் தங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் சசிகலா விடுதலையை காலதாமதப்படுத்த சிறை நிர்வாகம் சதித்திட்டம் தீட்டுவதாக ஆதரவாளர் ராஜராஜன் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிந்து விசாரணை செய்ய பெங்களூரு காவல்துறை ஆணையருக்கு ராஜராஜன் இமெயிலில் புகார் தெரிவித்துள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் மீது வழக்கு பதிந்து விசாரிக்க சசிகலா ஆதரவாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கும்பகோணம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு!

தஞ்சாவூர் கும்பகோணம் அரசு கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை இன்று தஞ்சை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை...

ஏன் இருக்கிறது என்று தெரியாத குடல்வால் ஏற்படுத்தும் பாதிப்பு… அறிகுறிகள் அறிவோம்!

மனித உடலில் எதற்காக இருக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் ஒரு உறுப்பு குடல்வால். அதனால் பயன் இருக்கிறதா என்று தெரியவில்லை. சிலருக்கு அது தொல்லையாக மாறுவது மட்டும் தொடர்கிறது. சிறுகுடல்...

தமிழக வாழ்வுரிமை கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த திமுக!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ளதால் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய காட்சிகளாக பார்க்கக்கூடிய அதிமுக - திமுக கட்சிகள் இந்த தேர்தலிலும் நேருக்கு...

வாக்கு சீட்டில் புகைப்படம் இருக்காது: தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. விருப்பமனு விநியோகம் நிறைந்து வேட்பாளர்களுக்கான...
TopTamilNews