செப் 1 ஆம் தேதி முதல் ‘இவர்களுக்கு’ தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

செப் 1 ஆம் தேதி முதல் ‘இவர்களுக்கு’ தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செப் 1 ஆம் தேதி முதல் ‘இவர்களுக்கு’ தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவடையாமல் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அந்தந்த மாநிலங்களில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கட்டுபாடுகள் விதித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வருவதால் வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது . 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான வழி காட்டு நெறிமுறைகள் ஏற்கனவே சுகாதாரத் துறை மற்றும் கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

செப் 1 ஆம் தேதி முதல் ‘இவர்களுக்கு’ தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதால் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் யாரும் கல்லூரிக்கு வர கூடாது என்றும் தடுப்பூசி செலுத்தாத பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செப் 1 ஆம் தேதி முதல் ‘இவர்களுக்கு’ தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது; மாணவர்களுக்கு தேவையான தடுப்பூசி கையிருப்பு இருக்கிறது.அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு முன்னேறி வருகிறது. தமிழக முதல்வர் கட்டுமான தொழிலாளர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் இந்தியாவில் எந்த மாநிலமுதல்வரும் இவ்வளவு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. சென்னை மாவட்டத்தில் 90.11 சதவீத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 112 கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தும் ம் பணி வருகின்ற செப் 1ம் தேதி தொடங்கும். தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகம், கல்லூரிகளுக்கு வந்து தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.