பிரதமர், மத்திய அமைச்சர்கள் 2020-ம் ஆண்டு சொத்து விவரம்

 

பிரதமர், மத்திய அமைச்சர்கள் 2020-ம் ஆண்டு சொத்து விவரம்

இந்தாண்டு ஜூன் மாத நிலவரப்படி, 2020-ம் ஆண்டிற்கான பிரதமர் மற்றும் பிற மத்திய அமைச்சர்கள்களின் சொத்து விபரங்கள் குறித்த ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்தாண்டு ரூ.36 லட்சம் அதிகரித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா’வின் சொத்து மதிப்பு 3.67 கோடி குறைந்துள்ளது. ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்தான் அதிக சொத்துடையவர் என்பது தெரியவந்துள்ளது.

பிரதமர், மத்திய அமைச்சர்கள் 2020-ம் ஆண்டு சொத்து விவரம்


பிரதமர் நரேந்திர மோடியின் நிகர சொத்து மதிப்பானது ரூ. 2.49 கோடியிலிருந்து ரூ. 2.85 கோடியாக உயர்ந்துள்ளது. மோடி குஜராத் காந்தி நகரிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிலுள்ள தனது வங்கியில் டெபாசிட்டாக 3 லட்சத்து 38 ஆயிரத்து 173 ரூபாய் வைத்துள்ள மோடி நிரந்தர வைப்பு நிதியாக ரூ.1,60,28,939 வைத்துள்ளார்.ரூ.8,43,124 மதிப்பிலான தேசிய சேமிப்பு பத்திரங்களும், ரூ.1,50,957 மதிப்பிலான ஆயுள் காப்பிடுகளும், ரூ. 20,000 மதிப்பிலான வரி சேமிப்பு பத்திரங்களும், ரூ.1.75 கோடி மதிப்பிலான அசையும்

பிரதமர், மத்திய அமைச்சர்கள் 2020-ம் ஆண்டு சொத்து விவரம்

சொத்துக்களும், ரூ1.5 லட்சம் மதிப்பிலான 45 கிராம் தங்க நகைகளும் கணக்கில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.இதுவரை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் வங்கிகளின் மூலம் கடன்கள் ஏதும் பெற்றதில்லை என்றும் குறிப்பிடுள்ளனர். மோடி தன் கைவசம் ரொக்கமாக 31 ஆயிரத்து 450 ரூபாய் மட்டும் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வங்கிக் கணக்கில் 1.04 கோடி ரூபாயும், ரூ.44.47 லட்சம் மதிப்பிலான நகைகளும், அசையா சொத்துக்களாக குஜராத்தில் 10 இடங்களும், தனது மனைவி பெயரில் ரூ.8 கோடிக்கும் அதிகமான சொத்துக்களையும் வைத்துள்ளதாகவும், இதன் நிகர மதிப்பானது கடந்த ஆண்டைவிட குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர், மத்திய அமைச்சர்கள் 2020-ம் ஆண்டு சொத்து விவரம்


பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்:அசையும் சொத்துக்களின் மதிப்பு: ரூ 1.97 கோடிஅசையா சொத்துக்களின் மதிப்பு: ரூ 2.97 கோடி
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் அசையும் சொத்து மதிப்பு: ரூ 2.97 கோடி.அசையா சொத்து மதிப்பு: ரூ 15.98 கோடி. சொந்தமாக 6 வாகனங்கள் இருக்கிறது.

பிரதமர், மத்திய அமைச்சர்கள் 2020-ம் ஆண்டு சொத்து விவரம்


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனன், கணவருடன் இணைந்து ரூ.99.36 லட்சம் மதிப்பிலான குடியிருப்பு பகுதியை சொந்தமாக கொண்டுள்ளதாகவும்.விவசாய நிலங்களின் மதிப்பு: ரூ.16.02 லட்சம் எனவும் குறிப்பிடப்படுள்லது.

பிரதமர், மத்திய அமைச்சர்கள் 2020-ம் ஆண்டு சொத்து விவரம்


மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியின்அசையும் சொத்துமதிப்பு: ரூ 1.77 கோடி.அசையா சொத்துமதிப்பு: ரூ 4.64 கோடி. ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு: ரூ 27.47 கோடி ஆகும். – இர. சுபாஸ் சந்திர போஸ்