• April
    03
    Friday

Main Area

Main



குடியரசு தின வழக்கத்தையும் மாற்றிய மோடி! தேசிய போர் நினைவுச்சின்னத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை....

உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மலர் அஞ்சலி
உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மலர் அஞ்சலி

குடியரசு தினத்தில் போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாட்டின் பிரதமர் அமர் ஜவான் ஜோதியில் மலர் வலையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அந்த வழக்கத்தை மாற்றியுள்ளார்.

பிரதமர் மோடியை வரவேற்கும் ராணுவ அதிகாரிகள்

71வது குடியரசு தினத்தை முன்னிட்டு, அமர் ஜவான் ஜோதியில் மலர் அஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக இந்தியா கேட் பகுதியில் உள்ள தேசிய போர் நினைவுசின்னத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி

டில்லி இந்தியா கேட் அருகே சுமார் 40 ஏக்கர் பரப்பில் புதிதாக அமைக்கப்பட்ட தேசிய போர் நினைவுச் சின்னத்தை பிரதமர்  நரேந்திர மோடி கடந்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதியன்று திறந்து வைத்தார். இந்த இடத்தில் நாடு சுதந்திரம் அடைந்தது முதல் போரில் உயிர் தியாகம் செய்த 25,942 வீரர்களின் பெயர்களும் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.