சீதா பிறந்தது நேபாளம்தான்… ராமர் அயோத்தியில்தான் பிறந்தார்! -ராமர் கோவில் டிரஸ்ட் கண்டனம்!

 

சீதா பிறந்தது நேபாளம்தான்… ராமர் அயோத்தியில்தான் பிறந்தார்! -ராமர் கோவில் டிரஸ்ட் கண்டனம்!

ராமர் பிறந்த இடம் நேபாளத்தில் உள்ளது என்றும் அவர் நேபாளி என்றும் கூறிய நேபாள பிரதமர் ஒளிக்கு ராமர் கோவில் கட்டுமான கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.

சீதா பிறந்தது நேபாளம்தான்… ராமர் அயோத்தியில்தான் பிறந்தார்! -ராமர் கோவில் டிரஸ்ட் கண்டனம்!ராமர் பிறந்த இடம் இந்தியாவில் உள்ள அயோத்தி இல்லை. அது உண்மையில் நேபாளத்தில் உள்ளது. ராமர் இந்தியர் இல்லை. அவர் நேபாள நாட்டைச் சார்ந்தவர் என்று நேபாள பிரதமர் ஒளி கூறியதாக செய்தி வெளியானது. இது இந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. சீனா கொடுத்த அழுத்தம் காரணமாக அவர் அப்படி பேசியிருக்கலாம் என்று பலரும் நேபாள பிரதமருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சீதா பிறந்தது நேபாளம்தான்… ராமர் அயோத்தியில்தான் பிறந்தார்! -ராமர் கோவில் டிரஸ்ட் கண்டனம்!இதற்கு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான அறக்கட்டளையின் உறுப்பினர் மஹத் தினேந்திர தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “கடவுள் ராமர் அயோத்தியில்தான் பிறந்தார். சராயு நதிக்கு அருகில் உள்ள அயோத்தியில் ராமர் பிறந்தார். இந்துக்களின் நம்பிக்கையும் அதுதான். அதே நேரத்தில் ராமரின் மனைவி சீதா நேபாளத்தில் இருந்து வந்தவர் என்பதும் உண்மை. ஆனால் ஒளி ராமர் நேபாளத்தை சார்ந்தவர் என்று கூறுவது தவறு. நேபாள பிரதமரின் அறிவிப்புக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

சீதா பிறந்தது நேபாளம்தான்… ராமர் அயோத்தியில்தான் பிறந்தார்! -ராமர் கோவில் டிரஸ்ட் கண்டனம்!ராமா தள் டிரஸ்ட் தலைவர் கல்கி ராம் தாஸ் மகாராஜ் கூறுகையில், “நேபாள பிரதமர் ஒளி பாகிஸ்தானுக்காக வேலை செய்து வருகிறார். இந்து அரசாக இருந்த நேபாளம் தற்போது சீனா, பாகிஸ்தானுக்காக வேலை செய்து வருகிறது. புனித புத்தகத்தில் அயோத்தியின் கிழக்கே சராயு நதி பாய்கிறது என்று குறிப்பிடுகிறது. நேபாளத்தில் சராயு நதி இல்லை. நேபாள பிரதமர் ஒரு மாதத்தில் தான் கூறியதை நிரூபிக்க முடியுமா என்று சவால் விடுகிறேன்” என்றார்.